ஐபோன் 13 விலைக் குறைப்பு: ஐபோன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. உங்கள் அபிமான ஐபோனை மிக குறைந்த விலையில் வாங்க ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. ஐபோன் 13, சந்தையில் மிக அதிக டிமாண்டில் இருக்கும் மாடலாகும். இந்த மாடல் விற்பனையில் ஐபோன் 14 க்கும் நல்ல போட்டியாக இருந்து வருகிறது. ஏனெனில் இதில் பல அட்டகாசமான அம்சங்கள் உள்ளன. மேலும் ஐபோன் 13-ல் அவ்வப்போது பல வித சலுகைகளும் வழங்கப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது இந்த மாடலில் உங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு தள்ளுபடி உள்ளது. இந்த ஐபோன் மாடலை ஃப்ளிப்கார்ட்டில் வாங்கினால் அதிக அளவில் சேமிக்கலாம். இந்த ஐபோன் மாடலை வாங்குவது பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும். ஐபோன் 13-ல் கிடைக்கும் தள்ளுபடி சலுகையைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


iPhone 13 இல் கிடைக்கும் தள்ளுபடி சலுகை என்ன?


ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் ஐபோன் 13-ல் அதிக அளவு தள்ளுபடி கிடைக்கிறது. தள்ளுபடி மூலம் இதை வாங்கும் போது மிச்சமாகும் தொகை கொண்டு வாடிக்கையாளர்கள் ஒரு நல்ல மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனையும் வாங்கிவிடலாம். ஹோலிக்கு முன் தொடங்கப்பட்டுள்ள இந்த தள்ளுபடி சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். 


ஃபிளிப்கார்ட்டில் ஆப்பிள் ஐபோன் 13 (பிங்க், 128 ஜிபி) இன் அசல் விலை ரூ.69,900 ஆகும். ஆனால் அதற்கு 11 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு வாடிக்கையாளர்கள் அதை ரூ. 61,999-க்கு வாங்க முடியும். இது உடனடி தள்ளுபடியாகும், இதற்காக நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. சலுகைகள் இதோடு முடிந்துவிடவில்லை. பிற சலுகைகள் என்னென்ன உள்ளன என்று பார்க்கலாம். 


மேலும் படிக்க | எச்சரிக்கை! போனை முறையாக சார்ஜ் செய்யவில்லை என்றால் வெடிக்கும்!


எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் பெரிய பலனைத் தருகிறது


ரூ.61,999 விலை கொண்ட ஐபோன் 13 இல் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சலுகைகள் உள்ளன. இந்த மாடலை வாங்கினால், வாடிக்கையாளர்கள் ரூ.23,000 கூடுதல் தள்ளுபடி பெறலாம். இந்த ஸ்மார்ட்போனில் ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், அதாவது பரிமாற்ற தள்ளுபடி வழங்கப்படுகின்றது. உங்களிடம் பழைய ஸ்மார்ட்போன் பரிமாற்றிக்கொள்ள இருந்தால் இந்த எக்ஸ்சேஞ்ச் போனஸ் பொருந்தும். 


எனினும், வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன் நல்ல நிலையில் இருப்பதையும், சமீபத்திய மாடலாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அபோதுதான் இந்த சலுகையை பெற முடியும். இந்த சலுகையில், வாடிக்கையாளர்களுக்கு ரூ. 61,999 இல் இருந்து ரூ.23000 குறைக்கப்படுகிறது. இதற்குப் பிறகு ஐபோனின் விலை மிகவும் குறைந்துவிடும், வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.38,999 செலுத்தி இதை வாங்கலாம். 


மேலும் படிக்க | Chat GPT: சாட்ஜிபிடி ஓபன் ஏஐ போட்ட மாஸ் பிளான்! கூகுளுக்கு சவால்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ