பிரதர் பிரிண்டர் 17 புதிய பிரிண்டர்களை அறிமுகப்படுத்துகிறது. அச்சிடுவதில் மிகச் சிறந்ததாக செயல்படும் இந்த பிரிண்டர்களைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம். இந்தியாவில் புதிய லேசர் பிரிண்டர்களை அறிமுகப்படுத்தியுள்ள பிரிண்டர் தயாரிப்பு நிறுவனமான பிரதர், இதனை சிறிய அளவிலான அலுவலகங்கள், எல்லா வகையிலான நிறுவனங்கள் ஆகியவற்றின் தேவைக்கேற்ப வடிவமைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிறுவனங்களின் வேலையை எளிதாக்கும் வகையில் இந்த பிரிண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த புதிய பிரிண்டர்களில் பல்வேறு நல்ல அம்சங்கள் உள்ளன. தொழில்நுட்பத்தில் சிறப்பான பிரதர் பிரிண்டரின் புதிய வரவுகள் பற்றி விரிவாகத் தெரிந்துக் கொள்வோம். .


புதிதாய் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதர் பிரிண்டர்களின் சிறப்பம்சங்கள்
பல நல்ல அம்சங்களைக் கொண்டுள்ள பிரதர் பிரிண்டர், வேலையை விரைவாகச் செய்ய உதவுகிறது. இந்த பிரிண்டர்கள் ஒரு நிமிடத்தில் 34 பக்கங்கள் வரை அச்சிடும் திறன் கொண்டவை. அதேபோல, ஒரு காகிதத்தின் இருபுறமும் அச்சிடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருபப்தால், காகிதங்கள் வீணாவதை தவிர்க்கலாம். இதைத் தவிர, ஒரே நேரத்தில் 250 பக்கங்கள் வரை பிரிண்டரில் வைத்திருக்கும் வசதி இருப்பதால், அடிக்கடி காகிதம் தீர்ந்துப்போய், அதனை அவ்வப்போது நிரப்ப வேண்டிய அவசியமில்லை.


பிரிண்டர் அணுகல்
இந்த புதிய பிரிண்டர்களை, மொபைல் போன், டேப்லெட் அல்லது கணினியில் இருந்தும் எளிதாக இயக்க முடியும். இவை ஒய்ஃபை மற்றும் யூஎஸ்பி (Wi-Fi & USB) உடன் இணைக்கக்கூடியவை. மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள பிரதர் பிரிண்டர்கள் பயன்படுத்த எளிதானவை. தரமான  பிரிண்டர்கள் மிகவும் குறைந்த விலைக்குக் கிடைக்கும்.


மேலும் படிக்க | மோட்டோரோலா எட்ஜ் 50 போனின் முதல் விற்பனை! ஃப்ளிப்கார்ட்டில் சலுகை விலையில் ஸ்மார்ட்போன்!


பிரதர் பிரிண்டர் நிறுவனம் மூன்று வகையான பிரிண்டர்களை தயாரித்துள்ளது. அவற்றின் வகைகளையும், தன்மைகளையும் தெரிந்துக் கொள்வோம்.


டோனர் பாக்ஸ் சீரிஸ் (Toner Box Series)
சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்ற டோனர் பாக்ஸ் பிரிண்டர்களில் நிறைய அச்சிடலாம் இவற்றின் விலையும் குறைவு. இந்த பிரிண்டர்களின் அச்சுத் தரமும் மிகச் சிறப்பாக இருக்கிறது. குறைந்த செலவில் அதிக பக்கங்களை அச்சிடலாம். தோராயமாக ஒரு பக்கத்தை அச்சிட 33 காசுகள் தான் ஆகும்.


மோனோ லேசர் பிரிண்டர் சீரிஸ் (Mono Laser Printer Series)
கருப்பு மற்றும் வெள்ளையில் அச்சிடுவதற்கு சிறந்த மோனோ லேசர் பிரிண்டர்கள் சிறந்தவை. வேகமான மற்றும் நல்ல தரமான பிரிண்டர்கள் என்று அறியப்படும் இந்த பிரிண்டர்களின் உதவியுடன் குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையிலான பக்கங்களை அச்சிடலாம்.


வண்ண எல்.இ.டி பிரிண்டர் மற்றும் மல்டிஃபங்க்ஷன் பிரிண்டர் சீரிஸ் (Color LED Printer and Multifunction Printer Series)


இந்த பிரிண்டர் வண்ணத்தில் அச்சிடுவதற்கு மிகவும் உகந்தது. இந்த பிரிண்டர்கள் அடக்கமான கச்சிதமான அளவில் கையடக்கமாக இருக்கும் என்பதால், எங்கு வேண்டுமானாலும் வைத்திருக்க முடியும்.  குறைந்த சத்தத்தை உருவாக்கும் இந்த கலர் எல்.இ.டி பிரிண்டர்களில் காகிதமும் சேமிக்கப்படுகிறது.


மேலும் படிக்க | கனவுலகிலும் பரபரப்பை ஏற்படுத்த தயாராகும் ஜியோ! விர்சுவல் ரியாலிடியில் முகேஷ் அம்பானி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ