அமேசான் மான்சூன் கார்னிவல் விற்பனை (Amazon Monsoon Carnival) நடந்து வருகிறது. இந்த மெகா விற்பனையில் மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் மிக மிக குறைவாக வாங்க முடியும். குறிப்பாக, நோக்கியாவின் நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனை வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வாங்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்மார்ட்போன்களுக்கு 40% தள்ளுபடியும், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு இதேபோன்று மெகா அதிரடி தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அற்புதமான வாய்ப்பை நீங்கள் தவறவிட்டுவிடாதீர்கள். நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், பட்ஜெட் விலையில் வாங்க வேண்டும் என விரும்பிக் கொண்டிருந்தால், இது சரியான சந்தர்ப்பம்.


மேலும் படிக்க | சூப்பர் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகும் Tecno Pova ஸ்மார்ட்போன்


Nokia G21 சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்


Nokia G21 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,499. ஆனால் அமேசானில் ரூ.12,999க்கு கிடைக்கிறது. இந்த போனுக்கு 10 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இது தவிர, வங்கி மற்றும் பரிமாற்ற சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையெல்லாம் நீங்கள் சரியாக பயன்படுத்தினீர்கள் என்றால் நீங்கள் வாங்க இருக்கும் நோக்கிய ஜி 21 போனின் விலை கணிசகமாக குறையும்.  



Nokia G21 வங்கிச் சலுகை


Nokia G21 ஸ்மார்ட்போனை அமேசான் மெகா கார்னிவல் தள்ளுபடியில் நீங்கள் வாங்கினால், ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துங்கள். ஏனென்றால், அந்த கிரெடிட் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆஃபரில் 2 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் கிடைக்கும் போன்கள், கூடுதலாக ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் கிடைக்கும். அதாவது,ரூ.11,999 -க்கு வாங்குவீர்கள். 


எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்


அமேசான் விற்பனையில் நோக்கிய ஜி 21 ஸ்மார்ட்போனுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உண்டு. அதிகபட்சம் ரூ.10,050 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கொடுக்கப்படுகிறது. இதற்காக நீங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்ய வேண்டும். ஆனால் உங்கள் பழைய போனின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே ரூ.10,050 தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் முழுமையாகப் பெற முடிந்தால், 1,949 ரூபாய்க்கு நீங்கள் இந்த போனை வாங்கலாம். 


மேலும் படிக்க | வாட்சப்பில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் DP-யை மறைப்பது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR