மைக்ரோசாப்டின் ( Microsoft ) அடுத்த  தலைமுறை Windows OS  என்னும் ஆபரேசிங் சிஸ்டமான விண்டோஸ் 11 ஆபரேடிங் சிஸ்டம் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது. இதன் பதிப்பு  அதிகார பூர்வமற்ற தளங்களில் கிடைக்கிறது என்றாலும்,  அதனை இப்போது இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுவரை, "புதிய" விண்டோஸ் OS ஆன விண்டோஸ் 11  என்பது, விண்டோஸ் 10 -ல் உள்ள முக்கிய அம்சங்களுடன்  அப்படியே எடுத்துக் கொண்டு, சில அம்சங்களில் மாறுபாடுகள் கொண்ட து என்பதாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே, விண்டோஸ் 11  என்பது விண்டோஸ் 10 என்பதன் அப்கிரேடட் வெர்ஷன் தானா என்பதே பலரது கேள்வியாக உள்ளது. 


இந்நிலையில், மைக்ரோசாப்ட் ( Microsoft ) விண்டோஸ் 10 ஆபரேடிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் பயனர்களுக்கு விண்டோஸ் 11  இலவசமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், விண்டோஸ் 8.1 மற்றும் விண்டோஸ் 7  பயன்படுத்தும் பயனர்கள் புதிய OS  இலவசமாக கிடைக்குமா என்பது தெரியவில்லை


ALSO READ | Microsoft News: 2025ம் ஆண்டுக்குள் Windows 10 மூடப்படுவதன் பின்னணி தெரியுமா

சில ஆண்டுகளுக்கு முன்பு விண்டோஸ் 7 பயனர்களுகான இலவச அப்டேட் சலுகையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. எனினும் தரவுகளின் அடிப்படையில், விண்டோஸ் 7 உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டாவது விண்டோஸ் ஓஎஸ் ஆகும், இதனை 15.52 சதவீத பயனர்கள் பயன்படுத்துகின்றனர்.  எனவே மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11 ஆப்ரேடிங் சிஸ்டத்தை, இவர்களுக்கு இலவசமாக வழங்கலாம் என்றாலும், ஈந்த்ஃஅ பயனர்களுக்கு  விற்க விரும்பும் வாய்ப்புகளே அதிகம்


இலவச அப்டேட் சலுகை விண்டோஸ் 8.1 பயனர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இலவச அப்டேட்டை  பெற விண்டோஸ் 8 பயனர்கள் முதலில் விண்டோஸ் 8.1 க்கு தங்கள் கணினியை அப்டேட் செய்ய வேண்டும்.


விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 பயனர்களில் பெரும்பாலானவர்கள் கார்ப்பரேட்  பயனர்கள் என கூறப்படுகிறது. நவீன மடிக்கணினிகளில் (laptop) வாங்கும் போது விண்டோஸ் 10 ஆப்ரேடிங் சிஸ்டம் லோட் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், பழைய மாடல்கள்  வாங்குபவர்களுக்கு விண்டோஸ் 10 அப்டேட் இலவசமாக கொடுக்கப்பட்டது.


மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 11 ஐ ஜூன் 24 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது. 


ALSO READ | Google Updates: கூகுள் ஏன் தேடல் வழிமுறைகளைப் புதுப்பிக்கிறது?  


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR