உங்கள் கணினியை புதுமையாக்க வருகிறது Windows 11: இந்த பயனர்கள் இதை இலவசமாக பெறலாம்
விண்டோஸ் 11 இல், முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள லே-அவுட் உள்ளது. ஏனெனில், ஸ்டார்ட் மெனுவின் நிலை, புதிய ஐகான்கள், தீம் ஆகியவை மாறியுள்ளன.
மைக்ரோசாப்ட் அக்டோபர் 5 ஆம் தேதி விண்டோஸ் 11 ஐ வெளியிடவுள்ளது. நிறுவனம் இதை 4 மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. விண்டோஸ் 11 விண்டோஸ் 10 பயனர்களுக்கு இலவச மேம்படுத்தலாக வரும் என்று தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசப்ட் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் தொடங்கப்பட்ட ஆதரவு சாதனங்களுக்கு முன்னுரிமை இருக்கும். மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் 11 ரோல்அவுட் கட்டம் கட்டமாக நடைபெறும் என்று ஒரு புதிய வலைப்பதிவில் கூறியது. ஏனெனில் சர்வதேச சந்தையில் புதிய சாதனங்களுக்கு புதுப்பித்தல் கிடைத்த பிறகு, பழைய அமைப்புகளுக்கு இது கிடைக்கும். அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் சாத்தியமான அனைத்து சாதனங்களுக்கும் விண்டோஸ் 11 மேம்படுத்தல் நிறைவடைந்துவிடும் என்று மைக்ரோசாப்ட் நம்பிக்கை கொண்டுள்ளது.
விண்டோஸ் 11 இல் இந்த மாற்றங்கள் இருக்கும்
விண்டோஸ் 11 (Windows 11) இல், முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள லே-அவுட் உள்ளது. ஏனெனில், ஸ்டார்ட் மெனுவின் நிலை, புதிய ஐகான்கள், தீம் ஆகியவை மாறியுள்ளன. முன்னர் இருந்ததை விட, புதிய வடிவமைப்பு இன்னும் மென்மையாக இருக்கும்.
ALSO READ: Microsoft Windows 11: அசத்தலான தோற்றம்; அசத்தலான அம்சங்கள்
மைக்ரோசாப்டின் (Microsoft) கூற்றுப்படி, விண்டோஸ் 10 உடன் ஒப்பிடும்போது விண்டோஸ் 11 பல செயல்திறன் மேம்பாடுகளைக் கொண்டுள்ளது. புதிய அப்டேட்டில் பவர் எபிஷியன்சி அதிகமாக இருக்கும். பின்னணியில் 40 சதவிகிதம் சிறிய அப்டேட்கள் இயங்கும். விண்டோஸ் 11 இன் சிறப்பம்சம் என்னவென்றால், விண்டோஸ் ஓஎஸ் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளைக் கொண்டிருக்கும். இது வரும் மாதங்களில் விண்டோஸ் இன்சைடருக்கான மதிப்பாய்வோடு தொடங்குகிறது.
உங்கள் கணினிக்கான விண்டோஸ் 11 தகுதியை எப்படி சரிபார்ப்பது
விண்டோஸ் 10 பிசி-க்களுக்கு தகுதியான விண்டோஸ் அப்டேட் அறிவிப்புகள், அப்டேட் கிடைக்கும் போது அனுப்பப்படும் என்று மைக்ரோசாப்ட் கூறியுள்ளது.
யூசர் செட்டிங்> விண்டோஸ் அப்டேட் > செக் ஃபார் அப்டேட்ஸ் என்பதை தேர்ந்தெடுத்தும் பயனர்கள் புதுப்பிப்புகளைச் (அப்டேட்களை) சரிபார்க்கலாம்.
விண்டோஸ் 11 க்கு தகுதியற்றதாக இருக்கும் கணினிகள், அக்டோபர் 14, 2025 வரை விண்டோஸ் 10 ஐ ஆதரிக்கும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
ALSO READ: Windows 11: மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11 அறிமுகம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR