இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் 5.84 மில்லியன் மொபைல் வாடிக்கையாளர்கள் தங்கள் நெட்வொர்கில் இருந்து மற்ற நெட்வொர்கிற்கு மாற விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு மொபைல் நெட்வொர்கில் இருந்து மற்றொரு நெட்வொர்கிற்கு மாறும் முறைமையான Mobile number portability (MNP)-க்கு கடந்த ஜனவரி மாதம் 5.84 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இன்கம்மிங் கால்களுக்கும் பிரபல மொபைல் நெட்வொர்க் சேவை நிறுவனங்கள் கட்டணங்கள் வசூளித்ததன் காரணாம இந்த விளைவு ஏற்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


பெறப்பட்ட 5.84 மில்லியன் விண்ணப்பங்களில், 3.17 மில்லியன் விண்ணப்பங்கள் ஜோன்-1 பகுதியில் இருந்தும், ஜோன்-2 பகுதியில் இருந்து 2.67 மில்லியன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் பெறப்பட்ட MNP விண்ணப்பங்களின் எண்ணிக்கை 411.98 மில்லியனாக இருந்த நிலையில், ஜனவரி 2019 முடிவில் இந்த எண்ணிக்கை 417.82-ஆக அதிகரித்துள்ளது.


ஜோன்-1 பகுதிக்கு உட்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் டெரிட்டரிகள் முறையே டெல்லி, குஜராத், ஹரியாணா, இமாச்சல் பிரதேஷ், ஜம்மு காஷமீர், மகாராஷ்டிரா, மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரபிரதேசம்(கிழக்கு), உத்திரபிரதேசம் (மேற்கு) ஆகியன ஆகும். அதேப்போல் ஜோன்-2 பகுதிக்கு உட்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் டெரிட்டரிகள் முறையே ஆந்திர பிரதேஷ், அசாம், பிகார், கர்நாடகா, கேரளா, கொல்கத்தா, மத்திய பிரதேஷ், வட கிழக்கு இந்தியா, ஒரிசா, தமிழ்நாடு, மற்றும் மேற்கு வங்கம்.


ஜோன்-1 பொறுத்தமட்டில் இதுவரை அதிகப்படியான விண்ணப்பங்கள் பெற்ற பகுதிகள் முறையே,. ராஜஸ்தான் (33.59 மில்லியன்), மகாராஷ்டிரா (30.01 மில்லியன்) ஆகியன ஆகும். அதேப்போல் ஜோன்-2 பொறுத்தமட்டில் இதுவரை அதிகப்படியான விண்ணப்பங்கள் பெறப்பட்ட பகுதிகள் முறையே கர்நாட்டகா (39.18 மில்லியன்) இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு (35.56 மில்லியன்) விண்ணப்பங்கள் ஆகும்.