ஹலோ மோட்டோ.... புதிய ஸ்மார்ட் ஃபோன் அறிமுகம்
5000 எம்.ஏ.ஹெச் பேட்டரியுடன் மோட்டோ நிறுவனம் புதிய ஸ்மார்ட் ஃபோனை அறிமுகம் செய்தது.
மோட்டோரோலா நிறுவனம் முற்றிலும் புதிய மோட்டோ E22s ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்தது. முன்னதாக மோட்டோ E32 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட சூழலில், தற்போது இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது. இதில் 6.5 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 8MP செல்ஃபி கேமரா, மீடியா டெக் ஹீலியோ ஜி37 பிராசஸர், 16MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்டும் வழங்கப்படும். பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி உடையது. இத்துடன் 10 வாட் சார்ஜிங் வசதி உள்ளது.
மோட்டோ E22s அம்சங்கள்:
6.5 இன்ச் HD+ 1600x720 பிக்சல் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர் IMG பவர் விஆர் GE8320 GPU 4 ஜிபி ரேம் 64 ஜிபி மெமரி மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி ஆண்ட்ராய்டு 12 மற்றும் மை யுஎக்ஸ் டூயல் சிம் ஸ்லாட் 16MP பிரைமரி கேமரா 2MP டெப்த் கேமரா 8MP செல்ஃபி கேமரா 3.5mm ஆடியோ ஜாக் எப்எம் ரேடியோ பக்கவாட்டில் கைரேகை சென்சார் வாட்டர் ரெசிஸ்டண்ட் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 யுஎஸ்பி டைப் சி 5000 எம்ஏஹெச் பேட்டரி 10 வாட் சார்ஜிங்.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
மோட்டோ E22s ஸ்மார்ட்போன் இகோ பிளாக் மற்றும் ஆர்க்டிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.8,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் விற்பனையானது அக்டோபர் 22ஆம் தேதி தொடங்குகிறது. புதிய மோட்டோ E22s ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அடடே..வாட்ஸ்அப்பில் வந்த சூப்பரான அப்டேட்! இனி எடிட் செய்து கொள்ளலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ