Motorola Edge 20 விற்பனை காலவரையின்றி ஒத்திவைப்பு
Motorola Edge 20 மற்றும் Motorola Edge 20 Fusion ஸ்மார்ட்போன்கள் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
சில நாட்களுக்கு முன்பு Motorola Edge 20 மற்றும் Motorola Edge 20 Fusion ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மார்ட்போனின் விற்பனை நாளை முதல் தொடங்கவிருந்தது, மேலும் மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் விற்பனை ஆகஸ்ட் 27 முதல் தொடங்க இருந்தது.
இந்நிலையில் தற்போது மோட்டோரோலா மோட்டோ எட்ஜ் 20 (Motorola Edge 20) இன் விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. தேதி நீட்டிப்பு குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அத்துடன் புதிய விற்பனை தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
ALSO READ | Motorola-வின் அட்டகாசமான Moto G60s போன் அறிமுகம்: விலை, பிற விவரம் இதோ
இதற்கிடையில் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சிப்செட் தட்டுப்பாடு காரணமாக விற்பனை தாமதமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. எட்ஜ் 20 மாடலின் புதிய விற்பனை தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இரு மாடல்களின் சிறப்பம்சங்கள்
இந்த இரண்டு மாடல்களிலும் 6.7 இன்ச் AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. எட்ஜ் 20 பியூஷன் மாடலில் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், எட்ஜ் 20 மாடலில் 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் உள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 20 மாடலில் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர் உள்ளது. அதேசமயம் மோட்டோரோலா எட்ஜ் 20 பியூஷன் மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர் உள்ளது.
இரு மாடல்களிலும் 108 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் உள்ளது. இரு மாடல்களிலும் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் எட்ஜ் 20 பியூஷன் மாடலில் 2 எம்பி டெப்த் சென்சார், எட்ஜ் 20 மாடலில் 8 எம்பி டெலிபோட்டோ கேமரா இருக்கிறது. இரு மாடல்களிலும் 5ஜி கனெக்டிவிட்டிக்கு பல்வேறு பேண்ட்கள், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், வழங்கப்பட்டு இருக்கிறது.
மோட்டோ எட்ஜ் 20 மாடல் 4000mah பேட்டரி, 30 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. மோட்டோ எட்ஜ் 20 பியூஷன் மாடலில் 5000Mah பேட்டரி மற்றும் 30 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கபட்டு உள்ளது.
ALSO READ | Motorola Defy அட்டகாச அறிமுகம்: கீழே போட்டாலும், நீரில் விழுந்தாலும் ஒன்றும் ஆகாது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR