Motorola-வின் அட்டகாசமான Moto G60s போன் அறிமுகம்: விலை, பிற விவரம் இதோ

Motorola நிறுவனம் Moto G60s ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டோரோலா நிறுவனம் தொலைபேசியில் உள்ள ஒவ்வொரு வசதியையும் குறைந்த விலையில் வழங்க முயற்சித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 12, 2021, 12:49 PM IST
Motorola-வின் அட்டகாசமான Moto G60s போன் அறிமுகம்: விலை, பிற விவரம் இதோ title=

Motorola New Phone Launch: Motorola நிறுவனம் Moto G60s ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொலைபேசி தற்போது பிரேசிலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மோட்டோரோலா நிறுவனம் தொலைபேசியில் உள்ள ஒவ்வொரு வசதியையும் குறைந்த விலையில் வழங்க முயற்சித்துள்ளது, இது சாதாரண மக்களுக்கு மிகவும் நல்ல விஷயமாக இருக்கும். 

Moto G60s 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ள டிஸ்பிளே, 6 ஜிபி ரேம் மற்றும் சிறந்த கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போனை விரைவாக சார்ஜ் செய்யலாம். மோட்டோ ஜி 60-ன் விலை மற்றும் பிற சிறப்பான அம்சங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Moto G60s அம்சங்கள்

தொலைபேசியில் (Mobile Phone) பெரிய திரை உள்ளது. இதில் 6.8 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவும் உள்ளது. இது முழு எச்டி + தெளிவுத்திறனுடன் வருகிறது. சாதனத்தில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு உள்ளது. தொலைபேசியின் ஸ்டோரேஜை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1 டிபி வரை அதிகரிக்கலாம். இந்த கைபேசியில் ஆக்டா-கோர் ஹீலியோ ஜி 95 சிப்செட் மற்றும் கிராபிக்சுக்காக மாலி-G76 MC4 GPU ஆகியவை உள்ளன.

ALSO READ: Motorola Defy அட்டகாச அறிமுகம்: கீழே போட்டாலும், நீரில் விழுந்தாலும் ஒன்றும் ஆகாது

Moto G60s கேமரா

மோட்டோ G60s ஒரு குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் முதன்மை கேமரா 64 மெகாபிக்சல்களைக் கொண்டுள்ளது. இது தவிர, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா, 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட், 5 மெகாபிக்சல் மேக்ரோ மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை இதில் கொடுக்கப்பட்டுள்ளன. செல்ஃபிக்காக 16 மெகாபிக்சல் கேமரா இதில் உள்ளது.

Moto G60s மற்ற அம்சங்கள்

தொலைபேசியில் இணைப்பு வசதிக்காக, இரட்டை சிம் ஆதரவு, வைஃபை 802.11 பி / ஜி / என் / ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், 4 ஜி, என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மோட்டோ போனுக்கு பவர் கொடுக்க, 5000WAh சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி உள்ளது.

Moto G60s விலை

Moto G60s பிரேசிலில் 2,499 BRL க்கு (சுமார் ரூ. 35,900) வாங்கலாம். இந்த போன் எப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இந்த தொலைபேசி பச்சை மற்றும் நீல நிறங்களில் கிடைக்கும்.

ALSO READ: இந்தியாவில் அறிமுகமானது Motorola Moto E7 Power ஸ்மார்ட்போன், என்னென்ன அம்சங்கள்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News