ஜியோ 5ஜி பயனர்களுக்கு குட் நியூஸ்... டேட்டாவை வாரி வழங்கும் அம்பானி - புதிய பிளானில் டாப் நன்மைகள்!
Jio Unlimited 5G Data Plan: ஜியோ அதன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் விதமாக, பல்வேறு நன்மைகளை தரும் புதிய 5ஜி ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
Jio Unlimited 5G Data New Plan: நீங்கள் ஜியோ வாடிக்கையாளர் என்றால் இந்த திட்டத்தை நிச்சயம் தெரிந்துவைத்துக்கொள்வது நல்லது. இப்போது பலரும் 4ஜி மொபைலில் இருந்து 5ஜி மொபைலுக்கு மாறி வருகின்றனர். காரணம், ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவையை சில தேர்ந்தெடுத்த பிளான்களுக்கு வரம்பற்ற வகையில் வழங்கி வருகின்றன. எனவே, வாடிக்கையாளர்களும் 5ஜி ஸ்மார்ட்போனை நோக்கி படையெடுக்க, அனைத்து நிறுவனங்களும் 5ஜி மொபைல் தயாரிப்பையும் முடுக்கிவிடத் தொடங்கிவிட்டன.
இதில், ஜியோ நிறுவனம் முன்னர் அனைத்து 5ஜி மொபைல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும், 5ஜி சேவையை வரம்பற்ற வகையில் வழங்கி வந்தது. ஆனால், சில மாதங்களுக்கு முன் கட்டுப்பாடுகள் வந்துவிட்டன. அதாவது, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 5ஜி சேவையை வழங்காமல், தினமும் 2ஜிபி மற்றும் அதற்கு மேல் டேட்டா பிளான்களை கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான் 5ஜி சேவை என அறிவிக்கப்பட்டுவிட்டது.
புதிய 5ஜி ரீசார்ஜ் திட்டம்
5ஜி சேவையால் வரம்பற்ற டேட்டா கிடைப்பதால் நீங்கள் காலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை நேரலையில் பார்க்கலாம், ஓடிடியில் திரைப்படங்கள் வெப்-சீரிஸ்களை தொடர்ந்து பார்க்கலாம். உங்களின் வேலை சார்ந்தும் அதிவேக இணையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இத்தனை பலன்கள் கிடைப்பதால் ஜியோ வாடிக்கையாளர்கள் 5ஜி சேவைக்கு மாறி வருகின்றனர்.
அந்த வகையில், 5ஜி வாடிக்கையாளர்களுக்கு தற்போது ஆச்சர்யமளிக்கும் வகையில், ஜியோ புதிய ரீசார்ஜ் திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் 5ஜி இணைய சேவை உடன் பல்வேறு நன்மைகளும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன. இந்த புதிய ரீசார்ஜ் திட்டத்தின் விலை என்ன, அதன் வேலிடிட்டி என்ன, அதன்மூலம் கிடைக்கும் வேறு பலன்கள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
புதிய 5ஜி திட்டத்தின் பலன்கள்?
999 ரூபாய்க்கு புதிய 5ஜி சேவையை ஜியோ தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது. மொத்தம் 98 நாள்கள் வேலிடிட்டியுடன் இந்த திட்டம் வருகிறது. இதனால் நீங்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. மூன்று மாதங்களுக்கு மேல் இந்த சேவையை பெறலாம். இதில் உங்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டா கிடைத்தாலும், ஒருநாளுக்கு 2ஜிபி டேட்டாவும் கிடைக்கும். 5ஜி இல்லாத இடங்களில் இதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மொத்தம் 196ஜிபி டேட்டா இந்த பிளான் மூலம் உங்களுக்கு கிடைக்கும். இதுவும் போக வரம்பற்ற 5ஜி டேட்டா இருக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். 5ஜி சேவையை பெற உங்களின் ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் அதிவேகமான 5ஜி டேட்டாவை பெறுவீர்கள்.
இந்த 999 ரீசார்ஜ் திட்டத்தை பெறுவது மூலம் ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ கிளவுட் போன்ற தளங்களையும் நீங்கள் இலவசமாக பெறலாம். ஜியோ சினிமாவில் பல திரைப்படங்கள், வெப்-சீரிஸ், விளையாட்டுத் தொடர்களை பார்க்கலாம். ஜியோ டிவி மூலம் பல்வேறு மொழி சேனல்களை நேரலையில் பார்க்கலாம். உங்களுக்கு தேவையானவற்றை சேமித்துக்கொள்ளவும் ஜியோ கிளவுட் உபயோகமாக இருக்கும்.
மேலும் படிக்க | இனி ஜியோ சினிமா இலவசம் இல்லை! 1 மாதத்திற்கு பிரிமியம் தொகை எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ