இந்தியாவில் தொலைதொடர்பு சேவை முன்னனி நிறுவனமாக விளங்கும் ஜியோ நிறுவனம், பிராட்பேண்ட் சேவையிலும் முதலிடத்தை பிடிக்கும் வகையில், தனது ஜியோ பைபர் பிராட்பேண்ட் சேவை பெற விரும்புபவர்களுக்கு, குறைந்த கட்டணத்தில் அதிவேக இணையம், வரம்பற்ற அழைப்பு மற்றும் இலவச OTT சந்தாக்கள் கொண்ட திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் சிறந்த பிராட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனமாக வளர்ந்து வரும் ஏர்டெல் நிறுவனமும், இதே போன்ற சலுகைகள் கொண்ட பல பிராட்பேண்ட் திட்டங்களை வழங்கி வருகிறது.
ஜியோ மற்றும் ஏர்டெல் தங்கள் வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில், சில சிறந்த திட்டங்களை ]வழங்கி வருகின்றன. இவற்றில், 300 எம்பிபிஎஸ் இணைய வேகத்துடன் வரும் இரு நிறுவனங்களின் பிராட்பேண்ட் திட்டங்களை ஒப்பிட்டு, எதில் அதிக நன்மைகள் கிடைக்கிறது அறிந்து கொள்ளலாம். நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல OTT சேனல்களிம் இலவச சந்தாக்கள் அவற்றில் அடங்கும்.
ஜியோ ரூ 1499 பிராட்பேண்ட் திட்டம்
ஜியோவின் (Reliance Jio) ஜியோ பைபர் அல்லது ஏர் பைபர் பிராட்பேண்ட் திட்டத்தில் OTT சந்தாக்களுடன் அதிவேக இண்டெர்நெட் வசதியை பெறலாம். இந்த திட்டத்தை ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு இரு வகை வாடிக்கையாளர்களும் பெறலாம். ப்ரீபெய்டு திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. அதே சமயம் போஸ்ட்பெய்ட் ஒரு மாத வேலிடிட்டி இருக்கும். இந்த திட்டம் 300 Mbps இணைய வேகத்துடன் வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. வரம்பற்ற அழைப்பிற்கு வாடிக்கையாளர்கள் லேண்ட்லைன் இணைப்பையும் இலவசமாகப் பெறலாம். இதற்கு வாடிக்கையாளர் தான் லேண்ட்லைன் கருவியை வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ரூ.1499 பிராட்பேண்ட் திட்டம் ஓடிடி நன்மைகள் விபரம்
ஜியோ பைபர் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 800+ டிவி சேனல்களையும் பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் வாடிக்கையாளர்கள் நெட்பிளிக்ஸ் ( Netflix -Basic), அமேசான் பிரைம் லைட் (Amazon Prime lite) மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) உட்பட மொத்தம் 15 OTT சந்தாக்களை இலவசமாகப் பெறுகிறார்கள். திட்டத்தில் அமேசான் பிரைம் லைட்டின் சந்தா 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்று நிறுவனம் கூறுகிறது. போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை 3, 6 மற்றும் 12 மாதங்களுக்கு வாங்கலாம். 12 மாத விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி கிடைக்கும்.
மேலும் படிக்க | ஜியோ பயனர்களுக்கு முகேஷ் அம்பானி கொடுத்துள்ள இன்ப அதிர்ச்சி!
ஏர்டெல்லின் ரூ.1599 பிராட்பேண்ட் திட்டம்
ஏர்டெல்லின் ரூ.1599 பிராட்பேண்ட் திட்டம் 300 எம்பிபிஎஸ் இணைய வேகத்துடன் வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் வரம்பற்ற அழைப்பிற்கான இலவச லேண்ட்லைன் இணைப்பையும் பெறலாம். வாடிக்கையாளர் தான் லேண்ட்லைன் கருவியை வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் வாடிக்கையாளர்கள் ரூ.350 மதிப்புள்ள டிவி சேனல்களுக்கான பேக்கை பெறுகிறார்கள்.
ஏர்டெல்லின் ரூ.1599 பிராட்பேண்ட் திட்டம் நன்மைகள் விபரம்
ஏடெல் பிராட்பேண்ட் திட்டத்தின் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் (12+ OTT) உடன் நெட்பிளிக்ஸ் (Netflix0, அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime) மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தா ஆகியவற்றை இலவசமாகப் பெறலாம். வாடிக்கையாளர்கள் ரூ.2500 முன்பணம் செலுத்தி இலவச இன்ஸ்டாலேஷன் பெறலாம் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த தொகை வரும் பில்களில் ஈடுகட்டப்படும். ஜிஎஸ்டி தற்போது திட்டத்தின் கட்டணத்தில் சேர்க்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
மேலும் படிக்க | இனி ஜியோ சினிமா இலவசம் இல்லை! 1 மாதத்திற்கு பிரிமியம் தொகை எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ