பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் ரிலையன்ஸ் ஜியோ விரைவில் வர்த்தக ரீதியில் 4ஜி இண்டர்நெட் சேவையை துவங்க உள்ளது. தற்போது முதற்கட்டமாக 90 நாட்களுக்கு இலவசமாக அன்லிமிடெட் 4ஜி இண்டர்நெட் ஆஃபரையும் ஜியோ வழங்கி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜியோ வர்த்தக ரீதியில் சேவையை துவங்கும் பட்சத்தில் மற்ற தனியார் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களின் இண்டர்நெட் டேட்டா கட்டணங்கள் வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாக கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனியார் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஐடியா கணிசமான அளவில் மொபைல் இண்டர்நெட் டேட்டா கட்டணத்தை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளன. 


மேலும், தற்போதைய கட்டணத்திலேயே 67 சதவீதம் வரை கூடுதலாக டேட்டாக்களை வழங்கவும் முடிவு செய்திருப்பதாக அவை தெரிவித்துள்ளன. இந்த வரிசையில் தற்போது வோடபோன் இந்தியா நிறுவனமும் இணைய உள்ளது. இன்னும் ஓரிரண்டு நாட்களில் மொபைல் இண்டர்நெட் டேட்டா கட்டணத்தை குறைக்க உள்ளதாக வோடபோன் இந்தியாவின் தலைமை நிர்வாகி சுனில் சூட் தெரிவித்துள்ளார்.


இங்கே ஏர்டெல் மற்றும் ஐடியா 3G-4G மொபைல் இண்டர்நெட் டேட்டா புதிய விலை பட்டியல்:


பார்தி ஏர்டெல் புதிய விலை ( பழைய விலை அடைப்புக்குள் )


580MB (440MB) – Rs 145


3GB (2GB) – Rs 455 for 28 days


5GB (3GB) – Rs 655 for 28 days


6GB (4GB) – Rs 755 for 28 days


7GB (5GB) – Rs 855 for 28 days


10GB (6.5GB) -Rs 989 for 28 days



ஐடியா புதிய விலை ( பழைய விலை அடைப்புக்குள் )


2GB – Rs 349 for 28 days (Rs 449)


5GB – Rs 649 for 28 days (Rs 849)


10GB-Rs 990 for 28 days (Rs 1349)


 


ரிலையன்ஸ் ஜியோ


ரிலையன்ஸின் கட்டணம்  தெளிவாக இன்னும் தெரிவிக்கப்படவில்லை, ஆனால் ஒரு அறிக்கையில் அந்த நிறுவனம் ரூ 2,999-க்கு வரம்பற்ற நெட்வொர்க் பயன்பாடு 3 மாதங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றன.


மேலும் சுமார் 10GB-Rs 500 மற்றும் 1GB- Rs 80 என்று எதிர்பார்க்கப்படுகிறது.