New feature: Youtube-ல் எவ்வளவு நேரம் Video பார்த்தீர்கள்?
பிரபல வீடியோ பதிவு தளமான Youtube-ல் வாடிக்கையாளர்கள் எவ்வளவு நேரம் செலவழித்தார்கள் என்பதை தெரிவிக்கும் வசதியினை அறிமுகம் செய்ய Youtube திட்டமிட்டுள்ளது!
பிரபல வீடியோ பதிவு தளமான Youtube-ல் வாடிக்கையாளர்கள் எவ்வளவு நேரம் செலவழித்தார்கள் என்பதை தெரிவிக்கும் வசதியினை அறிமுகம் செய்ய Youtube திட்டமிட்டுள்ளது!
இதுகுறித்து கூகிள் நிறுவனம் தெரிவிக்கையில்.. Youtube பயனர்கள் இனி தனி நபர் செலவீட்டு நேரத்தினை பார்க்கும் வசதி அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென தனி அமைப்பு கருவியினை Youtube அறிமுகம் செய்யவுள்ளது. இந்த அமைப்பு கருவியின் மூலம் Youtube பயனாலர்கள் ஒரு நாள், ஒரு வாரம்... என்னும் வகைப்பாட்டில் தங்களது செலவின நேரம் குறித்து அறிந்துக்கொள்ளலாம். இந்த வசதியானது இந்த வாரத்தின் முற்பகுதியில் Youtube-ல் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.
கூகிள் நிறுவனத்தின் வீடியோ பதிவு தளமான Youtube தனது வாடிக்கையாளர்களு பயன் அளிக்கும் திட்டங்கள் பலவற்றை சமீக காலமாக அறிமுகம் செய்து வருகின்றது. அந்த வகையில் தற்போது தனிநபர் செலவீட்டு நேரம் அறியும் வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது.
முன்னதாக, Night Mode, Music Streaming வசதிகளை தனது வாடிக்கையாளர்களுக்கா Youtube அறிமுகம் செய்தது. Music Streaming வசதி மூலம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான பாடல்களின் பட்டியலை உருவாக்கி இசைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பயனர்களுக்கு தேவையான இடைவெளியில் விளம்பரங்களை ஒளிப்பரப்பும் வசதியினை அறிமுகம் செய்தது. தனது பயனர்களை கவர இன்னும் பல வசதிகளையும் தொடர்ந்து Youtube அறிமுகம் செய்து வருகின்றது.