இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 180 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த சில நாட்களாக மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் உயர்ந்து காணப்படுகிறது. இதற்க்கு முக்கிய காரணமாக அமெரிக்க - சீனா இடையிலான நடைபெற்று வரும் வர்த்தக போரின் தாக்கம் என கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிக பங்குகளை கொண்ட பெரு நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் புள்ளிகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி போர்ட்ஸ், எச்டிஎப்சி, இண்டஸ் இண்ட் வங்கி, யெஸ் வங்கி, எஸ்பிஐ, டாடா ஸ்டீல், கோல் இந்தியா, எல்&டி, விப்ரோ, டிசிஎஸ் மற்றும் மஹிந்தரா & மஹிந்தரா நிறுவனப் பங்குகள் உயர்ந்து காணப்பட்டது. இதனால் சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது. 


இதனால் பிற்பகல் 3 மணி அளவில் மும்பை பங்குச்சந்தை 305.6 புள்ளிகள் உயர்ந்து 36,569.9 எனவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 80.60 புள்ளிகள் அதிகரித்து 11,028.95 புள்ளிகளாக உள்ளது. தற்போது வரை இன்று மும்பை பங்குச்சந்தையில் அதிகபட்சமாக 36,699.53 வரை புள்ளிகள் உயர்ந்தும், தேசிய பங்குச்சந்தையில் அதிகபட்சமாக 11,078.30 உயர்ந்தும் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.