Scorpio N design: மஹிந்திரா ஸ்கார்பியோ N வீடியோ டிரெய்லர் டீசர் வெளியானது
மஹிந்திரா ஸ்கார்பியோ N வீடியோ டிரெய்லர் வெளியானது. விரைவில் அறிமுகப்படுத்தப்படும் புதிய மஹிந்திரா எஸ்யூவியின் இருக்கை எப்படி இருக்கும் என்பதை இந்த டிரெய்லர் சொன்னது
புதுடெல்லி: மஹிந்திரா ஸ்கார்பியோ N அறிமுகம் நெருங்கி வருகிறது, நிறுவனம் புதிய வரவிருக்கும் எஸ்யூவிக்கான புதிய வீடியோ டிரெய்லரை வெளியிட்டது. விரைவில் அறிமுகப்படுத்தப்படும் புதிய மஹிந்திரா எஸ்யூவியின் இருக்கை எப்படி இருக்கும் என்பதை இந்த புதிய டிரெய்லர் சொன்னது.
"அதிகாரத்தின் இருக்கை எப்போதும் அப்பாவுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது" என்று டீஸர் குறிப்பிடுவது போல, ஸ்கார்பியோ N இருப்பதை டீசரில் பார்க்கலாம். இது SUV மஹிந்திரா ஸ்கார்பியோ Nக்காக "SUVகளின் பெரிய அப்பா" என்ற தலைப்பில் வெளியான பிரச்சாரத்திற்கு ஏற்ப வருகிறது. டீஸர் அடிப்படையில் புதிய எஸ்யூவியின் டிரைவிங் இருக்கை உயர்வாக இருப்பது தெரிகிறது.
புதிய SUV காரில், இதுவரை இருக்கும் கார்களிலேயே உயரமான இருக்கையுடன் வெளிவர இருப்பதாக மஹிந்திரா கூறியுள்ளது. எஸ்யூவியின் உட்புறங்கள் பற்றிய ஒரு விரைவான பார்வையும் கிடிஅக்கிறது. சில நொடிகள் மட்டுமே இருக்கும் இந்த டீசரில் இன்ஃபோடெயின்மென்ட் திரையும் காட்டப்படுகிறது. இது, XUV700 இன் அடிப்படை மாடலில் இருந்து பெறப்பட்டதாக தெரிகிறது.
முன்னதாக கசிந்த வீடியோ, வரவிருக்கும் Scorpio N இன் டாஷ்போர்டைப் பற்றிய விரிவான பார்வையை வழங்கியது. Scorpio_0029 இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோவில், இன்ஃபோடெயின்மென்ட் திரை மற்றும் ஸ்டீயரிங்கை நன்றாகப் பார்க்க முடிகிறது.
மேலும் படிக்க | 2022ம் ஆண்டின் சிறந்த தொழில்நுட்பக் கார்கள்
அந்த வீடியோவில், இந்த வடிவமைப்பு XUV700 MX வேரியண்ட் மாடலில் இருப்பதைப் போலவே இருக்கிறது. ஒப்பீட்டளவில், XUV700 இன் AX வகைகள் ஒற்றை கண்ணாடி திரையுடன் வருகின்றன.
ஸ்கார்பியோ N இன் இன்ஃபோடெயின்மென்ட் திரையின் கீழ் நான்கு வெவ்வேறு டயல்கள் இருப்பதைக் காணலாம். பட்டன்கள் மற்றும் டயல்கள் இவற்றில் நன்றாக தெரிகின்றன. இவை ஒலியளவு, ரேடியோ ட்யூனர் மற்றும் வெப்பநிலை மற்றும் ஏசி விசிறி வேகத்தை சரிசெய்வதற்காக இருக்கலாம்.
டயல்களின் கீழ், இழுவைக் கட்டுப்பாடு, மலை இறங்குதல், மலை ஏறுதல் மற்றும் அபாய விளக்குகள் போன்றவற்றுக்கான மாறுதல் போன்ற சுவிட்சுகள் இருப்பதை பார்க்க முடிகிறது.
இன்ஃபோடெயின்மென்ட் திரைக்கு வரும்போது, இது XUV700 அடிப்படை மாடலில் உள்ள அதே அளவு போல் தெரிகிறது. இரண்டு செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்ட ஏசி வென்ட்களும் உள்ளன. டாஷ்போர்டில் டூயல் டோன் உள்ளது. இது பழுப்பு நிறத்தில் உள்ளது..
மஹிந்திரா ஸ்கார்பியோ N இன் மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே (எம்ஐடி) முற்றிலும் டிஜிட்டல் திரையைப் பெறலாம். கூடுதலாக, Scorpio N இல் உள்ள ஸ்டீயரிங் XUV700 ஆக சற்று தட்டையானது மற்றும் ஸ்டீயரிங் வீலில் உள்ள பட்டன் இடங்கள் கூட ஒரே மாதிரியாகத் தெரிகிறது.
மேலும் படிக்க | காற்றை விலைபேச வரும் ஹூண்டாய் MPV
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR