Nokia G10 அறிமுகம் ஆனது: ரூ. 12,000-க்கும் குறைவான விலையில் அபாரமான அம்சங்கள்
இந்த தொலைபேசியின் விலை அனைவரும் வாங்கும் வகையில் குறைவாக உள்ளது. விலை குறைவாக இருந்தாலும், இதன் அம்சங்கள் சிறப்பாக உள்ளன.
நோக்கியா நிறுவனம் Nokia G10 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. Nokia G10 ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும். இது மீடியாடெக்கின் Helio G25 SoC உடன் வருகிறது.
இந்த தொலைபேசியின் விலை அனைவரும் வாங்கும் வகையில் குறைவாக உள்ளது. விலை குறைவாக இருந்தாலும், இதன் அம்சங்கள் சிறப்பாக உள்ளன.
இந்த நோக்கியா (Nokia) போனின் வடிவமைப்பு மற்றும் அம்சங்களை பற்றி அறியும் அனைவரும் கண்டிப்பாக இதை வாங்க முன்வருவார்கள். நோக்கியா போன்கள் எப்போதும் அவற்றின் வலுவான பேட்டரிக்காக பெயர் போனவை. இந்த போனிலும் நிறுவனம் ஒரு பெரிய, சிறந்த பேட்டரியை அளித்துள்ளது. நோக்கியா ஜி 10 போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Nokia G10: விவரக்குறிப்புகள்
நோக்கியா ஜி 10, 6.5 இன்ச் வாட்டர்-டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவுடன் ஹெச்டி+ ரெசல்யூஷனுடன் வருகிறது. இது ஒரு பாலிகார்பனேட் ஷெல் மற்றும் வட்ட பின்புற கேமரா மாட்யூலைக் கொண்டுள்ளது. 13 எம்பி பிரைமரி லென்ஸ், 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பு இதில் உள்ளது. முன்பக்கத்தில், செல்ஃபி எடுக்க 8 எம்பி ஒற்றை கேமரா லென்ஸ் உள்ளது.
ALSO READ: Nokia அதிரடி: தனது மிக மலிவான 5G ஃபோனை அறிமுகம் செய்யவுள்ளது, கசிந்த விவரங்கள் இதோ
Nokia G10: பிற அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போன் (Smartphone) MediaTek Helio G25 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. 512 ஜிபி வரையிலான கூடுதல் சேமிப்புக்காக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. இந்த இரட்டை சிம் ஸ்மார்ட்போன் 4G VoLTE ஐ ஆதரிக்கிறது. இதில் ப்ளூடூத் v5 இணைப்பு வசதியும் உள்ளது.
Nokia G10: பேட்டரி
நோக்கியாவின் இந்த ஸ்மார்ட்போன், 5,050mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 10W சார்ஜிங் ஆதரவு இதில் உள்ளது. ஆடியோ வசதிக்கு இதில், 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் மற்றும் சார்ஜ் செய்வதற்கு யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை இதில் உள்ளன. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ’அவுட் ஆஃப் தி பாக்ஸ்’-ல் இயங்குகிறது. இதில் சில நோக்கியா செயலிகள் ப்ரீ-லோட் செய்யப்பட்டுள்ளன.
Nokia G10: விலை மற்றும் சலுகைகள்
நோக்கியா ஜி 10, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ .12,149 ஆகும். இது நைட் மற்றும் டஸ்க் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே நோக்கியா இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.
தனது ஸ்மார்ட்போனில் தள்ளுபடியை வழங்க நோக்கியா ஜியோவுடன் (Jio) இணைந்துள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி விலை ஆதரவைப் பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை கடைகளில் அல்லது MyJio செயலியில் இருந்து வாடிக்கையாளர்கள் ரூ .11,150 க்கு இந்த தொலைபேசியை வாங்க முடியும்.
ALSO READ: Infinix போனின் அறிமுகம் விரைவில்: 10 நிமிடத்தில் full charge, முழு விவரம் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR