Infinix போனின் அறிமுகம் விரைவில்: 10 நிமிடத்தில் full charge, முழு விவரம் இதோ

ஒரு அதிரடியான அறிமுகத்தை ஹாங்காங்கைச் சேர்ந்த இன்பினிக்ஸ் நிறுவனம் செய்துள்ளது. இன்ஃபினிக்ஸ் விரைவில் இந்தியாவில் மற்றொரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தக்கூடும் என்று ஊகிக்கப்படுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 28, 2021, 06:03 PM IST
Infinix போனின் அறிமுகம் விரைவில்: 10 நிமிடத்தில் full charge, முழு விவரம் இதோ title=

ஸ்மார்ட்ஃபோன்கள் உலகில் ஒவ்வொரு நாளும் பல புதிய அறிமுகங்கள் ஏற்படுவதை நாம் பார்க்கிறோம். புதிதாக வரும் ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள், புதிய வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பயனர்களை ஈர்க்கும் வகையில் உள்ளன. இந்திய தொலைபேசி சந்தையும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்த முறை இப்படிப்பட்ட ஒரு அதிரடியான அறிமுகத்தை ஹாங்காங்கைச் சேர்ந்த இன்பினிக்ஸ் நிறுவனம் செய்துள்ளது. இன்பினிக்ஸ் தனது முதல் தொலைபேசியை இந்தியாவில் 2020 இல் அறிமுகப்படுத்தியது. இப்போது இன்ஃபினிக்ஸ் விரைவில் இந்தியாவில் மற்றொரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப் போகிறது என்று ஊகிக்கப்படுகிறது. இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

இன்பினிக்ஸ் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும்

செய்திகளின்படி, இன்ஃபினிக்ஸ் (Infinix) நிறுவனம், Infinix Zero X Neo என்ற ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தக்கூடும். பிஐஎஸ் சர்டிபிகேஷன் இணையதளத்தில், இந்த சாதனம் பிஐஎஸ் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இப்படி ஊகிக்கப்படுகிறது. இது முன்பு ப்ளூடூத் SIG மற்றும் கூகுள் ப்ளே கன்சோல்களிலும் காணப்பட்டது.

இந்த ஸ்மார்ட்போன் இந்தியா உட்பட வேறு சில நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படலாம் என்று ஊகிக்கப்படுகிறது. மேலும், ஜூன் மாதம், நிறுவனம் 160W சார்ஜிங் கொண்ட ஒரு கான்செப்ட் தொலைபேசி 2021 பற்றிய விவரங்களை வெளியிட்டது.

ALSO READ: Xiaomi வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: இந்த Redmi போனின் விலை அதிகரித்தது, புதிய விலை இதுதான்

இந்த ஸ்மார்ட்போனின் தோற்றம் எப்படி இருக்கும்?

இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் (Smartphone) 1080 x 2460 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் முழு HD டிஸ்ப்ளேவுடன் வரக்கூடும். இதன் பிக்சல் டென்சிடி 480 பிபிஐ ஆகும். X6810 மாடல் எண் கொண்ட இந்த போன் மீடியாடெக் ஹீலியோ G90 SoC ஆல் இயக்கப்படும் மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜைக் கொண்டிருக்கலாம்.

பேட்டரி வலுவாக இருக்கலாம்

ஜூன் மாதத்தில் தங்கள் கான்செப்ட் போனில் 160W ஃபாஸ்ட் சார்ஜிங் இடம்பெறும் என்று நிறுவனம் கூறியது. தற்போது அறிமுகம் ஆகும் போன் அதே போனாக இருந்தால், அது 160W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் உடன் வரக்கூடும். இந்த வகையான சார்ஜிங் வசதியை சாத்தியப்படுத்த, இன்ஃபினிக்ஸ் ஜீரோ எக்ஸ் நியோ பின்வரும் கூறுகளைக் கொண்டிருக்கும். நிறுவனத்தின் சொந்த அல்ட்ரா ஃப்ளாஷ் சார்ஜ் (யுஎஃப்சி) தொழில்நுட்பம், சூப்பர்சார்ஜ் பம்ப் மற்றும் 8 சி பேட்டரி செல் ஆகியவை இதில் இருக்கும். இது தொலைபேசியின் 4,000 எம்ஏஎச் பேட்டரியை 10 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய உதவும்.

Infinix Zero X Neo ஒருபோதும் பழுதடையாது

இந்த இன்பினிக்ஸ் போன் (Mobile Phone) 60 வகையான பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது. அதிக வெப்பநிலை, உயர் மின்னழுத்தம் மற்றும் மின்காந்த குறுக்கீடு போன்ற தீவிர சூழ்நிலைகளிலும் இது இயங்கும். இதன் பாதுகாப்பு அம்சங்கள் ஸ்மார்ட்போனின் அமைப்பின் பாதுகாப்பை கவனித்துக்கொள்ளும்.

ALSO READ: Vivo X70 Pro+ விரைவில் வெளியீடு; முழு விவரம் இதோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News