நோக்கியாவின் புதிய மொபைல் - 18 நாட்கள் நீடிக்கும் சார்ஜ்
நோக்கியா அறிமுகப்படுத்த இருக்கும் புதிய மொபைல் 18 நாட்கள் வரை சார்ஜ் நீடித்திருக்கும் என வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 105 ஆப்ரிக்கன் எடிஷன் என்ற பெயரில் புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது. 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியா 105 மாடலைப்போல் தெரிந்தாலும், அந்த மொபைலுக்கும் இதற்கும் எந்த ஒற்றுமையுடம் கிடையாது. கடந்த ஆண்டு 4G இணைப்புடன் கூடிய புதிய வெர்சனை அறிமுகப்படுத்தியது ஹெச்எம்டி நிறுவனம்.
Nokia 105 மாடல்
Nokia 105 ஆப்பிரிக்க வெர்சன் 1.77-இன்ச் QVGA திரை மற்றும் பிரபலமான பாம்பு உள்ளிட்ட 10 கேம்களை கொண்டுள்ளது. இந்த மொபைல் பாலிகார்பனேட்டால் சரிசமமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபியூச்சர் போன் யூனிசோக் 6531 E செயலி மூலம் இயக்கப்படுகிறது. 4எம்பி ரேம் உள்ளது. S30 + OS -ல் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 2G நெட்வொர்க்கை கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க | டாடாவின் இந்த ஃபாமிலி காரில் பம்பர் தள்ளுபடி: சூப்பர் வாய்ப்பு, மிஸ் செஞ்சிடாதீங்க
நோக்கியா 105 பேட்டரி
நோக்கியா 105 மொபைல் 800 mAh பேட்டரியை கொண்டிருக்கிறது. இந்த பேட்டரி 18 நாட்களுக்கு நீடிக்கும். மைக்ரோ USB கனெக்டர் மூலம் பேட்டரியை சார்ஜ் செய்யும் அம்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மொபைல் ஸ்டோரேஜில் 2000 தொலைபேசி எண்கள் மற்றும் 500 குறுஞ்செய்திகளை வைத்திருக்க முடியும் என்று நோக்கியா தெரிவித்துள்ளது.
நோக்கியா 105 விலை
இந்த ஃபியூச்சர் போனின் விலை குறித்து அறிவிக்கப்படவில்லை. அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் வகையிலான விலையை நிர்ணயிக்க உள்ளது. விரைவில் ஆப்பிரிக்கா மொபைல் சந்தையில் நோக்கியா 105 -ஐ களமிறக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க | Airtel Xstream Premium அறிமுகம் ஆனது: வெறும் ரூ.149-க்கு 15 ஓடிடி சேவைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR