இப்போது SIM கார்டுகளுக்கு பை-பை சொல்லலாம். Vodafone-Idea நிறுவனம் eSIM சேவையை தொடக்கியுள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வோடஃபோன் ஐடியா சிம் வைத்திருப்பவர்களுக்கு இனி சிம் கார்டு தேவையில்லை. சில குறிப்பிட வகை ஸ்மார்ட் ஃபோன்களுக்கு இந்த சேவை வழங்கப்படுகிறது. சிம் கர்டு இல்லாமலேயே அவர்கள் தொலை பேசி அழைப்புகள்  செய்யலாம். இண்டர்நெட் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். சில குறிப்பிட்ட ஸ்மார்ட்ஃபோன்கள் வைத்திருக்கும் Jio மற்றும் Airtel வாடிக்கையாளர்களுக்கு இது வழங்கப்படுகிறது.


 ஒருங்கிணைந்த SIM chip வடிவத்தில் eSIM வருகிறது.


Vodafone-Idea eSIM சேவை: பொருத்தமான ஸ்மார்ட் ஃபோன்கள் பட்டியல்


iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max, iPhone SE, iPhone Xs, iPhone Xs Max & iPhone XR ஆகிய மாடல்கள் வைத்திருக்கும் போஸ்ட் பெய்ட் இணைப்பு உள்ள வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய தொஇழில்நுட்ப சேவை வழங்கப்படும்.


Samsung Galaxy Z Flip மற்றும் Galaxy Fold வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த சேவை நீட்டிக்கப்படும்.


மும்பை, தில்லி மற்றும் குஜராத் ஆகிய டெலகாம் சர்கிளுக்கு மட்டுமே இந்த சேவை தற்போது வழங்கப்படும்.


ALSO READ | TikTok செயலிக்கு நீடிக்கும் பிரச்சனை… அடுத்த தடை ஆஸ்திரேலியாவா ..!!!


Vodafone-Idea eSIM வாங்குவது எப்படி?


 இந்த சேவையை பெற Vodafone Idea போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்கள் <space> email id  என 199 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டும்.


தொலைபேசி எண்ணுடன் இ-மைல் இணைக்கப்படவில்லை என்றால்,  email <space>email id  என 199 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டும்.


அதற்கு அவர்களுக்கு ஒரு பதில் எஸ் எம் எஸ் கிடைக்கும். அதற்கு eSIM கோரிக்கையை வேலிடேட் செய்ய  ‘ESIMY’ என பதில் அனுப்ப வேண்டும்


ALSO READ | வீடியோவில் விசிட் ..வாட்ஸ் அப்பில் டீல்…. கைக்கு வந்தது தீவு…!!!


அதன் பின் அவர்களுக்கு QR code பதிவு செய்யப்பட்ட இ-மைல் ஐடிக்கு அனுப்பப்படும்.  QR Code-ஐ ஸ்கேன் செய்து  eSIM சேவையை பெறலாம்.