Facebook வழங்கும் அசத்தல் அம்சம்; பதிவுகளை வேறு தளங்களுக்கு எளிதாக மாற்றலாம்
இப்போது உங்கள் பேஸ்புக் பதிவுகள், குறிப்புகளை Google ஆவணங்களாக மாற்றி சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
சமூக ஊடக வலைதளமான முகநூல் (Facebook), தங்கள் பயனர்களுக்கு ஒரு புதிய அசத்தலான அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் உதவியுடன், பயனர்கள் தங்கள் பதிவுகளையும் குறிப்புகளையும் கூகிள் ஆவணங்கள் (Google Document), பிளாகர் (Blogger) மற்றும் வேர்ட்பிரஸ்.காம் (WordPress.Com) ஆகியவற்றுக்கு மாற்ற முடியும்.
கடந்த ஆண்டு, முகநூலில் பதிவிடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பேக் பிளேஸ் (Backblaze), டிராப்பாக்ஸ் (Dropbox), கூகிள் புகைப்படங்கள் (Google Photos) மற்றும் கூஃபர் ( Koofr) ஆகியவற்றில் மாற்றி சேமித்து வைத்து கொள்ளும் அம்சத்தை அதன் பயனர்களுக்கு வழங்கியது.
பேஸ்புக்கின் (Facebook) தனியுரிமை மற்றும் பொதுக் கொள்கை இயக்குனர் ஸ்டீவ் செட்டர்ஃபீல்ட், மக்களின் வசதிக்காக, இந்த டூலின் (Tool) பெயரை மாற்றியுள்ளோம் என்றார். இப்போது இந்த டூலின் பெயர் ட்ரான்ஸ்பர் யுவர் இன்பர்மேஷன் என்பதாகும். மக்களின் தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் தேவைகளை மனதில் வைத்து இந்த டூலை உருவாக்கியுள்ளோம். இதில், தகவல் பரிமாற்றத்தைத் தொடங்குவதற்கு முன்பு கடவுச்சொல்லை ( ) மீண்டும் உள்ளிட வேண்டும். இதன் மூலம், நீங்கள் தரவைப் பாதுகாப்பாக மாற்ற முடியும். என்றார்.
இந்த டூலை அணுக, பயனர்கள் பேஸ்புக் செட்டிங்கில் உங்கள் பேஸ்புக் இன்பர்மேஷன் என்பதற்கு செல்ல வேண்டும். அங்கு சென்ற பிறகு, அதில் ‘Transfer Your Information' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் பதிவேற்றம் செய்ய விரும்பும் தகவலை தேர்ந்தெடுக்க வேண்டும். கூகிள் டாக்ஸ் (Google Document) , வேர்ட் பிரஸ் (WordPress.Com) மற்றும் பிளாகர் ((Blogger) ஆகியவற்றுக்கான ஆப்ஷன்களை இங்கே காணலாம். நீங்கள் ட்ரான்பர் செய்வதை உறுதிப்படுத்திய பின் உங்கள் தகவல் நீங்கள் விரும்பிய இடத்திற்கு மாற்றப்படும்.
ALSO READ | இந்தியா சட்டங்களை மதித்தால் தான் இந்தியாவில் இடம்: Twitter, FB-க்கு எச்சரிக்கை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR