Ola Electric ஸ்கூட்டர் S1 விற்பனை இன்று முதல் துவக்கம்; முழு விவரம் இங்கே
Ola Electric Scooter: ஓலா மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனை செப்டம்பர் 15 (இன்று) முதல் விற்பனை தொடங்கும் என்று நிறுவனம் அறிவித்தது.
புதுடெல்லி: Ola Electric ஸ்கூட்டர் அதன் விற்பனை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. முன்னதாக, செப்டம்பர் 8 ஆம் தேதி, Ola Electric ஸ்கூட்டர்களான S1 மற்றும் S1 Pro வாங்குவதற்கு லாக் இன் செய்த ஏராளமான வாடிக்கையாளர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்டனர்.
Ola Electric விற்பனை இன்று முதல் தொடங்குகிறது
தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக விற்பனை செயல்முறை ஒரு வாரம் தாமதமான நிலையில் தற்போது இன்று முதல் விற்பனை தொடங்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. ஓலா எஸ் 1 (Ola S1), எஸ் 1 ப்ரோ மின்சார ஸ்கூட்டரை ஆன்லைனில் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.
ALSO READ: நற்செய்தி! பெண்களால் இயக்கப்படும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையாக உருவெடுக்கும் OLA
OLA முன்பதிவு மற்றும் கொள்முதல் வரிசையில் உங்கள் நிலை எப்படி இருக்கும்?
முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களின் நிலை, முன்பதிவு மற்றும் கொள்முதல் வரிசையில் மாறாமல் அப்படியே இருக்கும். அதாவது, நீங்கள் முதலில் முன்பதிவு செய்திருந்தால், ஸ்கூட்டரை (Ola Electric Scooter) நீங்கள் முதலில் பெறுவீர்கள். ஸ்கூட்டரின் விநியோக தேதிகளும் மாறாமல் இருப்பதாக ஓலா தெரிவித்துள்ளது.
ஓலா நிறுவனம் கடந்த மாதம் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை (Ola Electric Scooter) இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியது-எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ. இவர்றின் விலை முறையே ரூ .99,999 மற்றும் ரூ .1,29,999 ஆகும் (எக்ஸ்-ஷோரூம் ஃபேம் II மானியம் மற்றும் மாநில மானியங்கள் தவிர).
செப்டம்பர் 8 முதல் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படும் என்றும் விநியோகங்கள் அக்டோபரில் தொடங்கும் என்றும் நிறுவனம் அறிவித்திருந்தது.
ஓலா எலக்ட்ரிக் தனது மின்சார ஸ்கூட்டர்களின் முன்பதிவுகளை ஜூலை மாதம் ரூ .499 க்கு திறந்தது. வெறும் 24 மணி நேரத்தில் 1 லட்சம் ஆர்டர்களை நிறுவனம் பெற்றது.
ஓலா எஸ் 1, 181 கிமீ வரம்பில் வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு 115 கிமீ அதிகபட்ச வேகம் கொண்ட இந்த ஸ்கூட்டரை வேகமான சார்ஜர் மூலம் 40 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.
இந்த மின்சார ஸ்கூட்டரில் (Electric Scooter) ரிவர்ஸ் மோட், ஹில் ஹோல்ட் ஃபங்க்ஷன், டிரைவிங் மோட்ஸ் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன.
ஓலா மின்சார ஸ்கூட்டர் 10 வண்ணங்களில் கிடைக்கிறது. இது 8.5 KW மோட்டார் மற்றும் 3.97 kWh பேட்டரி பேக்குகளுடன் வருகிறது. ஓலா தமிழ்நாட்டில் 500 ஏக்கர் பரப்பளவில் ஒரு உற்பத்தி ஆலையை நிறுவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: Ola Electric Scooter விற்பனையில் சிக்கல்: இந்த தேதியில் விற்பனை துவங்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR