Ola Electric Scooter விற்பனையில் சிக்கல்: இந்த தேதியில் விற்பனை துவங்கும்

செப்டம்பர் 8 முதல் ஓலா மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனை துவங்க இருந்த நிலையில், சில தொழில்நுட்ப காரணங்களால் அது நடைபெறவில்லை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 9, 2021, 10:29 AM IST
  • ஓலா மின்சார ஸ்கூட்டர்கள், சமீப காலங்களில் மோட்டார் வாகனத் துறையில் மிகுந்த சலசலப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
  • சில தொழில்நுட்ப காரணங்களால் செப்டம்பர் 8 அன்று விற்பனை தொடங்கவில்லை.
  • நிறுவனம் செப்டம்பர் 15 காலை 8 மணி முதல் விற்பனையைத் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
Ola Electric Scooter விற்பனையில் சிக்கல்: இந்த தேதியில் விற்பனை துவங்கும் title=

ஓலா மின்சார ஸ்கூட்டர்கள், சமீப காலங்களில் மோட்டார் வாகனத் துறையில் மிகுந்த சலசலப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன. அறிமுகம் தொடங்கி விநியோகம் வரை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் பல வித புதுமுறைகளை கையாண்டு வருகிறது.

செப்டம்பர் 8 முதல் இந்த மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனை துவங்க இருந்த நிலையில், சில தொழில்நுட்ப காரணங்கள் காரணமாக அது நடைபெறவில்லை. இந்த நிலையில், ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தின் இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால், தங்கள் வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுக்காக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டு ஒரு கடிதத்தை வெளியிட்டார். இப்போது, நிறுவனம் செப்டம்பர் 15 காலை 8 மணி முதல் விற்பனையைத் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

மின்சார ஸ்கூட்டருக்கு (Electric Scooter) முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி இருந்ததற்காக அகர்வால் தனது ட்விட்டர் பதிவில் மன்னிப்பு கேட்டார்.

"பல மணிநேரம் காத்திருக்க நேரிட்டதற்கான உங்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். வலைத்தளம் தரத்தில் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை. எங்களால் ஏற்பட்ட ஏமாற்றத்துக்காக உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” என்று பாவிஷ் அகர்வால் மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் எழுதினார்.

ALSO READ: Ola Electric Scooter: புக் செய்யும் முன் இவற்றை கண்டிப்பாக செக் செய்து கொள்ளுங்கள்

ஓலா வாடிக்கையாளருக்காக முற்றிலும் டிஜிட்டல் விற்பனை அனுபவத்தை உருவாக்கியுள்ளது என்று அவர் மேலும் கூறினார். இதில் எந்த ஆவணமும் இல்லாமல் டிஜிட்டல் செயல்முறை மூலம் கடன் பெறும் வசதியும் அடங்கும்.

"ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவத்தை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்க, இன்னும் ஒரு வாரம் ஆகும். இப்போது செப்டம்பர் 15, காலை 8 மணிக்கு எங்கள் விற்பனையைத் தொடங்குகிறோம் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். முன்பதிவு மற்றும் கொள்முதல் வரிசையில் உங்கள் நிலை மாறாமல் அப்படியே இருக்கும். அதாவது, நீங்கள் முதலில் முன்பதிவு செய்திருந்தால், வாகனமும் உங்களுக்கு தான் முதலில் கிடைக்கும்.” என்று அகர்வால் கூறினார். "எங்கள் விநியோக தேதிகளிலும் எந்த மாற்றமும் இல்லை.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தனது இரண்டு ஸ்கூட்டர்களான எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோவை, ஷோரூம் மாடலைத் தவிர்த்து, டிஜிட்டல் முறையில் விற்பனை செய்கிறது.  செப்டம்பர் 8 மாலை 6 மணிக்கு விற்பனைக்கான விண்டோ திறக்கப்பட்டது. ஆனால் சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது.

ஓலா மின்சார ஸ்கூட்டர்கள் (Ola Electric Scooter) அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 15 அன்று தொடங்கப்பட்டாலும், ரூ .99,999 என்ற ஆரம்ப விலையில், ஓலா எலக்ட்ரிக் ஒரு மாதத்திற்கு முன்பே ஆன்லைன் முன்பதிவுகளைத் தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய முதல் நாளே, இந்த ஸ்கூட்டர் 1 லட்சம் முன்பதிவுகளைப் பெற்றது. ரூ .499 க்கு இணையதளம் வழியாக செய்யக்கூடிய இந்த முன்பதிவு, முழு கட்டண செயல்முறையை முடிப்பதற்கான முதல் படியாகும்.

ALSO READ: Ola அடுத்த அதிரடி: விரைவில் வருகிறது ஓலா மின்சார கார், விவரம் இதோ!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News