Ola S1 Electric Scooter Launch: மின்சார வாகன சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஓலா மின்சார ஸ்கூட்டர் (Electric Scooter) நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை, மைலேஜ் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்பதிவு தொடங்கிய முதல் 24 மணி நேரத்தில் ஓலா 100,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை இந்த ஸ்கூட்டர் பெற்றது.
ஓலா எலக்ட்ரிக் (Ola Electric Scooter) நிறுவனம் இரண்டு புதிய எலக்ட்ரிக் பைக்குகளை சுதந்திர தினமான இன்று S1 என்ற பேஸ் வேரியண்ட், S1 Pro என்ற உயர் ரக வேரியண்ட் என இரு வேரியண்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இரு வேரியண்ட்களுமே ரைடிங் மோட்களின் எண்ணிக்கை, ஃபெர்பார்மன்ஸ், மைலேஜ், கலர்கள் என மாறுபட்டிருக்கின்றன.
ALSO READ: Ola S1 Electric Scooter அறிமுகம் ஆனது: இனி இந்திய சாலைகளில் ஓலா உலா!!
* S1 மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ ஆகவும், மைலேஜ் ஒரு முழுமையான சார்ஜில் 121 கிமீ ஆகவும் உள்ளது. நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரு ரைடிங் மோட்கள் கிடைக்கின்றன. இந்த மாடலில் 0 முதல் 40 கிமீ வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிப்பிடித்துவிடலாம். 2.98 kWh திறனுள்ள பேட்டரி. 5 வண்ணங்களில் இந்த பைக்கை பெறலாம். இந்த மாடலின் எடை 121KG ஆகும். வீட்டு சார்ஜரை பயன்படுத்தினால் இதனுடைய பேட்டரி முழுமையாக சார்ஜ் அடைய 4.48 மணி நேரங்கள் தேவைப்படும். எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் இதன் விலை ₹ 99,999 ஆகும்.
* S1 Pro மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 115 கிமீ ஆகவும், மைலேஜ் ஒரு முழுமையான சார்ஜில் 181 கிமீ ஆகவும் உள்ளது. நார்மல், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹைப்பர் என மூன்று ரைடிங் மோட்கள் கிடைக்கின்றன. இந்த மாடலில் 0 முதல் 40 கிமீ வேகத்தை 3 நொடிகளில் எட்டிப்பிடித்துவிடலாம். 3.97 kWh திறனுள்ள பேட்டரி. 10 வண்ணங்களில் இந்த பைக்கை பெறலாம். இந்த மாடலின் எடை 125KG ஆகும். வீட்டு சார்ஜரை பயன்படுத்தினால் இதனுடைய பேட்டரி முழுமையாக சார்ஜ் அடைய 6.30 மணி நேரங்கள் தேவைப்படும். எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் இதன் விலை ₹ 1,29,999 ஆகும்.
EMI வசதியுடனும் வாங்கலாம்
இது தவிர, வாடிக்கையாளர்கள் இந்த ஸ்கூட்டரை (Electric Scooter) இஎம்ஐ -யில் வாங்க விரும்பினால், நிறுவனம் அதற்கான வசதியையும் உங்களுக்கு வழங்குகிறது. நிறுவனத்தின் வலைத்தளத்தில், அனைத்து வங்கிகளின் EMI பட்டியலையும் தெரிந்து கொள்ளலாம்.
400 நகரங்களில் சார்ஜிங் பாயிண்டுகள் அமைக்கப்படும்
இந்தியாவில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக, நிறுவனம் 400 நகரங்களில் 1,00,000 -க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைபார்சார்ஜிங் மையங்களை (Hypercharging Points) அமைக்கும். இதனால், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் சார்ஜ் செய்வதில் எந்த சிரமமும் இருக்காது. எந்தெந்த நகரத்தில் சார்ஜிங் பாயிண்டுகள் அமைக்கப்படும் என்பது பற்றிய தகவல்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ளன.
இந்த பைக்குகளை 500 ரூபாய் முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். செப்டம்பர் 8ம் தேதி முதல் பைக்குகளில் டெலிவரி தொடங்கும். வீட்டுக்கே நேரடியாக டெலிவரி செய்யப்படும். இந்நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை ஓசூரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: Ola Scooter vs Simple One: ஆகஸ்ட் 15 அட்டகாசமான அறிமுகம், எந்த ஸ்கூட்டர் சிறந்தது?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR