Simple One Electric Scooter latest news: ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருடன், மற்றொரு மின்சார ஸ்கூட்டரும் சந்தையில் களமிறங்க தயாராகி வருகிறது. பெங்களூருவைச் சேர்ந்த மின்சார வாகன ஸ்டார்ட் அப் நிறுவனமான சிம்பிள் எனர்ஜியும் (Simple Energy) தனது முதல் இ-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மின்சார ஸ்கூட்டர் (Electric Scooter) ஆகஸ்ட் 15 அன்று பெங்களூருவில் அறிமுகம் செய்யப்படும். இதற்கான முன்பதிவும் அன்றே துவங்கும். முதல் கட்டமாக, 13 மாநிலங்களில் விற்பனையைத் தொடங்க நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.


முதல் கட்டமாக கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், கோவா, உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்த மின்சார ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்படும்.


இந்த மாநிலங்களில் அனுபவ மையங்களுக்கான இடத்தையும் ஒதுக்கியுள்ளதாக சிம்பிள் எனர்ஜி தெரிவித்துள்ளது. நிறுவனம் தனது வணிகத்தை நாடு முழுவதும் பரவச் செய்வதற்காக அடுத்த 2 ஆண்டுகளில் ரூ .350 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


ALSO READ: Ola Electric Scooter இந்த தேதியில் அறிமுகம் ஆகும்: விரைவில் துவங்கும் ஓலா உலா!!


முன்னதாக, பெங்களூரு, சென்னை (Chennai) மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களில் மட்டுமே இந்த ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய  திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள ஆலையில் ஆண்டு உற்பத்தி திறன் 10 லட்சத்தை எட்டியபோது, ​​இந்த கட்டத்தில் வணிகத்தை விரிவாக்க நிறுவனம் முடிவு செய்தது.


இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுஹாஸ் ராஜ்குமார், நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் இருந்து முன்பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை பெற்று வருவதாக கூறினார். இதைக் கருத்தில் கொண்டு, நிறுவனம் முன்பதிவு செய்தவர்களின் தேவைகளை நிறைவேற்ற முழு முனைப்புடன் முயற்சிக்கும் என்றும் அதனால், ஸ்கூட்டர் உற்பத்தியின் முதல் கட்டத்தை நிறுவனம் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.


சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.8 kWh லித்தியம் அயன் பேட்டரி இருக்கும். இது ஈகோ மோடில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 240 கி.மீ. வரம்பை அளிக்கும். இதில் கொடுக்கப்பட்டுள்ள பேட்டரியை ஸ்கூட்டரில் இருந்து தனியாக எடுக்க முடியும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.


இதன் மூலம் எளிதாக ஸ்கூட்டரை (Scooter) சார்ஜ் செய்ய முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிலோமீட்டர் ஆகும். வெறும் 3.5 வினாடிகளில் இந்த ஸ்கூட்டர் 0 முதல் 50 கிலோமீட்டருக்கான வேகத்தை பெற முடியும்.


ALSO READ: Komaki XGT X5: முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக Electric Scooter


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR