புதுடெல்லி: கோமகி நிறுவனம், முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக XGT-X5 மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிரிவுகளை சேர்ந்த வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு இந்த மின்சார ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரின் (Scooter) அதிகாரப்பூர்வ அறிமுகத்துக்கு முன்னரே இந்த ஸ்கூட்டர் 1000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.
ஒரு ஊடக அறிக்கையில், இந்த மாடல் இந்தியாவில் உள்ள அனைத்து டீலர்ஷிப்களிலும் கிடைக்கிறது என்றும் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதை இலவசமாக முன்பதிவு செய்யலாம் என்றும் கோமகி தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து அருகிலுள்ள டீலர்ஷிப் பிரிவு, வாடிக்கையாளரை தொடர்பு கொள்ளும் என்றும் நிறுவனம் தெரிவித்தது. கோமகி அதன் மின்சார வாகனங்களை வாங்குவதற்காக EMI வசதியையும் வழங்குகிறது.
இதுவரை, இந்த பிராண்ட் 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 21,000 யூனிட் எலக்ட்ரிக் வாகனங்களை விற்றுள்ளது. XGT-X5 மாடல் மெக்கானிக்கல் பார்க்கிங் அம்சம் போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.
ALSO READ: Ola Electric Scooter இந்த தேதியில் அறிமுகம் ஆகும்: விரைவில் துவங்கும் ஓலா உலா!!
XGT X5 சிவப்பு மற்றும் சாம்பல் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். இந்த மின்சார பைக், XGT-X5- (72V24AH) மற்றும் XGT-X5 GEL ஆகிய இரண்டு மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. XGT-X5- (72V24AH) மின்சார ஸ்கூட்டரின் (Electric Scooter) ரீடெயில் விலை ரூ. 90,500 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். XGT-X5 GEL வகையின் விலை ரூ. 72,500 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
XGT-X5-ஐ ஒரு முறை சார்ஜ் செய்தால் 80-90 கிலோமீட்டர் வரை செல்லும் என்று நிறுவனம் இந்த மின்சார வாகனம் (Electric Vehicle) பற்றி கூறியுள்ளது. இந்த வாகனம் VRLA ஜெல் பேட்டரிகள் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி என இரண்டிற்கும் இணக்கமானது என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள XGT X5 வண்டியில் மேம்பட்ட பாதுகாப்பிற்காக மீளுருவாக்கம் செய்யும் பிரேக்கிங் சிஸ்டம் (regenerative braking) மற்றும் ரிப்பேர் சுவிட்ச் ஆகியவை உள்ளன. இது சுய ஆய்வின் போது அடையாளம் காணப்பட்ட சிக்கல்களை விரைவாக சரிசெய்கிறது, இதனால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணத்தை மெற்கொள்ள முடியும்.
ALSO READ: வாகன ஓட்டிகளுக்கு நல்ல செய்தி: எளிய வழியில் சாதாரண ஸ்கூட்டரை மின்சார ஸ்கூட்டராக்கலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR