Ola E-Scooter Test Ride: ஓலாவின் மின்சார ஸ்கூட்டரின் சோதனை ஓட்டத்திற்காக (Test Drive) மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அவர்களுக்கென ஒரு சிறப்பான வாய்ப்பை அந்நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இந்த தீபாவளிக்குப் பிறகு எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டர்களின் டெஸ்ட் ரைடுகளை வழங்க உள்ளதாக ஓலா தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் உற்பத்தி ஆலையைக் கொண்டிருக்கும் மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஓலா, அதன் மின்சார ஸ்கூட்டர்கள் (Electric Scooter) நவம்பர் 10 முதல் டெஸ்ட் ரைடிற்கு கிடைக்கும் என்று கூறியுள்ளது. தற்போது நிறுவனம் மீண்டும் தனது ஸ்கூட்டர் விற்பனையை தொடங்கியுள்ளது. கடந்த விற்பனையில், இந்நிறுவனம் புக்கிங்கில் சாதனை படைத்தது.


மீண்டும் முன்பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கும்


ஓலா எலக்ட்ரிக் தனது இரண்டு மின்சார ஸ்கூட்டர்களான S1 மற்றும் S1 ப்ரோவை இந்திய சந்தையில் ஆகஸ்ட் 15 அன்று ரூ .1 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டு 1 மாதத்திற்குப் பிறகு அதன் முன்பதிவு இரண்டு நாட்களுக்குத் திறக்கப்பட்டது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இரண்டு நாட்களில், 1100 கோடிக்கும் அதிகமான ஆன்லைன் வர்த்தகம் செய்யப்பட்டது. நிறுவனம் முதல் 24 மணி நேரத்தில் 600 கோடி ரூபாய் முன்பதிவை பெற்றது. இப்போது இந்த ஸ்கூட்டர்களின் இரண்டாம் கட்ட முன்பதிவு நவம்பர் 1 ஆம் தேதி தீபாவளிக்கு முன்னதாக தொடங்குகிறது.


டெஸ்ட் ட்ரைவ் எப்போது தொடங்கும்
ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) குறிப்பிட்ட டெலிவரி விண்டோவுக்குள் ஸ்கூட்டர்களை ஒப்படைக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. நவம்பர் 10 முதல் வாடிக்கையாளர்களுக்கு ஓலா இ-ஸ்கூட்டரின் டெஸ்ட் ட்ரைவை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இ-ஸ்கூட்டர் எஸ் 1 க்கு முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் டெஸ்ட் ட்ரைவுக்குப் பிறகுதான் முழு கட்டணத்தையும் செலுத்தினால் போதும் என்று ஓலா நிறுவனம் கூறியுள்ளது.


ALSO READ:Ola Electric மின்சார ஸ்கூட்டர்: மீண்டும் தொடங்கும் முன்பதிவு 


அக்டோபர் 25 முதல் டெலிவரி தொடங்கவிருந்தது


ஒலா நிறுவனம், தனது இ-ஸ்கூட்டர்களான எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோவிற்கான ஃபைனல் பேமெண்டை அக்டோபர் 18 முதல் பெறவும், அக்டோபர் 25 முதல் டெலிவரியைத் தொடங்கவும் திட்டமிட்டது. டெஸ்ட் டிரைவுக்கு பின்னர் முழு தொகையையும்  செலுத்தலாம் என ஓலா வாடிக்கையாளர்களிடம் கூறியுள்ளது. இதனால் முன்பதிவு செய்யப்பட்ட வாகனங்களை சரியான நேரத்தில் வழங்குவது குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இருப்பினும், அனைத்து விநியோகங்களையும் சரியான நேரத்தில் மேற்கொள்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஓலா மின்சார ஸ்கூட்டர்களின் விலை என்ன?


ஓலா மின்சார ஸ்கூட்டரின் (Ola Electric Scooter) எஸ் 1 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .99,999, எஸ் 1 ப்ரோ வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .1,29,999 ஆகும். இது தவிர, ஓலா மின்சார ஸ்கூட்டரில் தேர்ந்தெடுக்க 10 வண்ணங்கள் உள்ளன. முன்பதிவின் போது விருப்பமான வண்ணத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நிறுவனத்தின் இணையதளத்தின்படி, வாடிக்கையாளர் விரும்பினால் ஸ்கூட்டரின் வண்ணத்தை பின்னர் மாற்றிக்கொள்ளலாம்.


ஓலா மின்சார ஸ்கூட்டர் 181 கிமீ வரம்பை அளிக்கின்றது


ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எஸ் 1 வேரியன்ட் முழு சார்ஜில் 121 கிமீ தூரத்தை கடக்கும். எஸ் 1 ப்ரோ முழு சார்ஜில் 181 கிமீ வரை செல்லும். ஓலா எஸ் 1 மாடல் 3.6 வினாடிகளில் 40 கிமீ வேகத்தில் செல்கிறது. எஸ் 1 ப்ரோ வெறும் 3 வினாடிகளில் மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 115 கிமீ ஆகும்.


ALSO READ:Cheapest Electric Scooter: ரூ.50,000-க்குள் கிடைக்கும் அட்டகாசமான மின்சார ஸ்கூட்டர்கள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR