இந்த டிவிக்கு மட்டும் ஸ்பெஷல் ஆஃபர்! ரூ.600 வாங்க அட்டகாசமான வாய்ப்பு
பிளிப்கார்ட்டில் ஆஃபர் விற்பனைகள் முடிந்தாலும், ஒரு டிவிக்கு மட்டும் ஸ்பெஷல் ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபரில் வெறும் 600 ரூபாய்க்கு அந்த டிவியை நீங்கள் வாங்கலாம்.
Flipkart Big Saving Days Sale: பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் முடிந்தது. விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்கள் மீது பெரிய தள்ளுபடிகள் கிடைத்தது. விற்பனை முடிந்தவுடன், பொருட்களின் விலை மீண்டும் உயர்ந்தன. ஆனால் பிக் சேவிங் டேஸ் சேல் முடிந்த உடனேயே, பிளிப்கார்ட் அப்ளையன்சஸ் போனான்ஸா விற்பனை தொடங்கியுள்ளது. இந்த விற்பனை ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதாவது, இந்த ஆஃபர்களில் ஸ்மார்ட் டிவியை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட் டிவி வாங்க விரும்பினால், இது சரியான நேரம். ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை வெறும் ரூ.600க்கு வாங்கலாம்.
கோடாக் 32 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி சலுகை
KODAK 7XPRO சீரிஸ் 32-இன்ச் ஸ்மார்ட் டிவியின் ஆரம்ப விலை ரூ.18,499. ஆனால் பிளிப்கார்ட்டில் ரூ.11,499-க்கு கிடைக்கிறது. டிவியில் 37% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகும், பல வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகள் உள்ளன, இதன் காரணமாக டிவியின் விலை கணிசமாகக் குறையும்.
மேலும் படிக்க | கூட்டத்தில் காணாமல் போய்விட்டால் கண்டுபிடிப்பதை சுலபமாக்கும் கூகுள் மேப்ஸ்
கோடக் எக்ஸ்சேஞ்ச் சலுகை
கோடாக் 32 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியில் ரூ.10,875 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது. நீங்கள் பழைய டிவியை மாற்றிக் கொண்டால், ஆபருடன் சேர்த்து எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கும். ஆனால் உங்கள் பழைய டிவியின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே ரூ.10,875 தள்ளுபடி கிடைக்கும். ஒருவேளை இந்த கண்டிஷனெல்லாம் சரியாக பொருந்து முழு எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைத்தால், 624 ரூபாய்க்கு நீங்கள் தொலைக்காட்சியை எடுத்துச் செல்லலாம்.
கோடக் டிவி பேங்க் ஆஃபர்
நீங்கள் பழைய டிவியை மாற்ற விரும்பவில்லை என்றால், வங்கி சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் தொலைக்காட்சியின் விலை மேலும் குறையும். கோடாக் 32 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை வாங்க, HDFC வங்கி அல்லது Flipkart Axis Bank கார்டைப் பயன்படுத்தினால், 575 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். தள்ளுபடிக்குப் பிறகு, ரூ.10,924-க்கு டிவியை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.
மேலும் படிக்க | Long Drive Scooter: நீண்ட தூர பயணத்தை நிஜமாக்கும் சூப்பர் ஸ்கூட்டர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ