புதிய 5G ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. குவாலிட்டி கேமராவுடன் OnePlus விரைவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது. புதிய OnePlus 10T 5G ஸ்மார்ட்போன் இன்னும் சில நாட்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த போன் குறித்த சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களும் வெளியாகி வருகிறது. சமீபத்தில், நிறுவனம் ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை உறுதிப்படுத்தியது என்பதால் OnePlus 10T 5G விவரக்குறிப்புகள், வெளியீட்டு தேதி மற்றும் அதன் விலை எவ்வளவு என்பதை அறிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

OnePlus 10T 5G எப்போது அறிமுகம்


OnePlus -ன் புதிய ஸ்மார்ட்போன் OnePlus 10T 5G வரும் நாட்களில் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் ஆகஸ்ட் 3, 2022 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. அதே நாளில் இருந்து முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம். இது ஆகஸ்ட் 6, 2022 அன்று Amazon இணையதளத்திலும் OnePlus இன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளிலும் விற்பனைக்கு வரும்.


மேலும் படிக்க | Tech Tips: விரிசல் அடைந்த மொபைல் திரையை வீட்டிலேயே சரி செய்யலாமா... உண்மை என்ன


OnePlus 10T 5G கேமரா


OnePlus 10T 5G கேமரா பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது முதன்மை சென்சாராக 50MP Sony IMX766 சென்சார் கொண்டிருக்கும். இந்த லென்ஸ் ஆப்டிகல் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிரதான சென்சாருடன், மேக்ரோ கேமராவுடன் கூடிய அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. இந்த போன் புதிய இமேஜ் கிளாரிட்டி இன்ஜின் (ICE) தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கும். இது கேமரா விவரங்களையும் புகைப்படம் எடுக்கும் வேகத்தையும் மேம்படுத்தும்.


OnePlus 10T 5G விலை


OnePlus 10T 5G இந்தியாவில் மூன்று ஸ்டோரேஜ் வகைகளில் அறிமுகப்படுத்தப்படலாம். 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு கொண்ட இந்த 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் மாடல் ரூ.49,999-க்கும், அதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு மாடலின் விலை ரூ.54,999 ஆகவும் இருக்கும். ஒன்பிளஸ் 10டி 5ஜியின் டாப் மாடல் 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மாடல் ரூ.55,999 விலையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


OnePlus 10T 5G அம்சங்கள்


இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 SoC செயலி, 32MP முன்பக்க கேமரா, 6.7-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு விகிதம் உள்ளது. இந்த போனில் 4800mAh பேட்டரி மற்றும் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைப் பெறலாம். இது 16 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி வரை சேமிப்பகத்துடன் பொருத்தப்படலாம்.


மேலும் படிக்க | Flipkart வழங்கும் அசத்தல் சலுகை; ₹699 விலையில் Nokia Smart TV!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ