Free OnePlus 10T 5G Offer: OnePlus 10T 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறந்த அம்சங்களுடன் வெளியாகியிருக்கும் இந்த மொபைலுக்கு பெரிய அளவிலான புரோமோஷனை ஒன்பிளஸ் நிறுவனம் முன்னெடுத்துள்ளது. சிறந்த பேட்டரி, 5ஜி மொபைல் என்ற அம்சங்கள் இருக்கும் இந்த மொபைலுக்கு வித்தியாசமான ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது. அதுஎன்னவென்றால், சரியாக விலையை சொல்பவர்களுக்கு ஒன்பிளஸ் நிறுவனத்தின் OnePlus 10T 5G ஸ்மார்ட்போன் இலவசமாக கொடுக்கப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வியக்க வைக்கும் பிளிப்கார்ட் சலுகை: வெறும் ரூ.199-க்கு அசத்தலான ரெட்மி 10 போன் 


OnePlus 10T 5G இலவசம் 


OnePlus 10T 5G ஸ்மார்ட்போனை எப்படி இலவசமாக பெறுவது? என யோசிக்கிறீர்களா?. இதனை ஒன்பிளஸ் நிறுவனமே அறிவித்திருக்கிறது. அதாவது, ஸ்மாட்போனின் விலையை நீங்கள் சரியாக கணித்து சொல்லும்பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கு இலவசமாக கிடைக்கும். இந்த ஆஃபர் இன்னும் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கும். புரோமோஷனுக்காக கொடுக்கப்பட்டுள்ள இந்த ஆஃபரை வெல்ல, வாடிக்கையாளர்கள் பலரும்  முயற்சி செய்து வருகின்றனர். 


OnePlus 10T 5G வெளியீடு


OnePlus 10T 5G இந்தியாவில் இன்று அதாவது ஆகஸ்ட் 3, 2022 அன்று இரவு 7:30 மணிக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வு, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் மற்றும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும். OnePlus 10T 5G லைவ் ஸ்ட்ரீம் பிளாட்ஃபார்ம்களில் இருந்து, மொபைலின் வெளியீட்டு நிகழ்வை நேரலையில் நீங்கள் பார்க்கலாம். 


OnePlus 10T 5G அம்சங்கள்


OnePlus 10T 5G ஆனது Qualcomm Snapdragon 8+ Gen 1 செயலியில் வேலை செய்யக்கூடியது. இதில் உங்களுக்கு முதல் முறையாக 16GB RAM வழங்கப்பட உள்ளது. இந்த ஃபோன் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. OnePlus 10T 5G-ல், நீங்கள் 6.7 இன்ச் முழு HD + AMOLED டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு வீதம், 720Hz தொடு மாதிரி வீதம், HDR10 + ஆதரவு உள்ளிட்ட அம்சங்களில் இருக்கும்.


மூன்று பின்புற கேமரா மற்றும் 16MP முன்பக்க கேமரா இருக்கும். OnePlus 10T 5G-ல் உங்களுக்கு 150W வேகமான சார்ஜிங் ஆதரவு வழங்கப்படும் என நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 4800mAh பேட்டரியும் இருக்கும். 


மேலும் படிக்க | அமோகமாக இன்று அறிமுகமாகும் OnePlus 10T 5G


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ