OnePlus Cloud 11: சீன நிறுவனமான OnePlus, டெல்லியில் OnePlus Cloud 11 நிகழ்வை இன்று நடத்தியது. அதன் நேரடி ஒளிபரப்பு இன்றிரவு நடந்தது. இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக பல புதிய தயாரிப்புகளை வெளியிட உள்ளது. டெல்லியில் அதன் OnePlus Cloud 11 வெளியீட்டு நிகழ்வில், snapdragon 8 Gen 2 செயலியுடன் OnePlus 11 ஐ அறிமுகப்படுத்தியது இன்று அறமுகப்படுத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 11 மாடலின் விலை ரூ. 56,999 ஆக உள்ளது. இது ஏற்கனவே சீனாவில் தொடங்கப்பட்டிருந்தது. ஏறத்தாழ அதே மாடலில் இங்கும் தொடங்கப்பட்டுள்ளது. 


OnePlus 11: விலை, கேமரா மற்ற முக்கிய அம்சங்கங்கள்


- OnePlus 11 மாடலின் அடிப்படை மாடல் 8 GB RAM மற்றும் 128 RAM மெமரிக்கு 56,000 ரூபாயில் தொடங்குகிறது. இதேபோல், OnePlus 11 இன் 16GB மற்றும் 256GB வகைகள் 61,999 ரூபாய்க்கு கிடைக்கும். முந்தைய OnePlus 10 Pro மற்றும் 9 Pro உடன் நாம் பார்த்த Hasselblad பிராண்டிங்கை இது மீண்டும் கொண்டுவருகிறது. 


- இந்த மொபைல், 16GB RAM மற்றும் 256 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்குகிறது.


- OnePlus 11 ஆனது Snapdragon 8 Gen 2 செயலியுடன் நிரம்பியுள்ளது. Titan Black மற்றும் Eternal Green என்ற இரண்டு வண்ணங்களில் வருகிறது.


மேலும் படிக்க | 10 ஆயிரம் ரூபாய் போனை வெறும் 550 ரூபாய்க்கு வாங்கலாம்! எப்படி? முழு விவரம்


- OnePlus 11 ஆனது 100W வேகமான சார்ஜிங்கை பெறுகிறது. மேலும் இது கிட்டத்தட்ட 4x வேகமான பதிவிறக்க வேகத்துடன் இரட்டை வைஃபை இணைப்பையும் ஆதரிக்கிறது. சாதனம் Wi-Fi 7 ஐ ஆதரிக்கிறது, இது முதல் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும்.


- இது 3வது தலைமுறை Hasselblad கேமரா அமைப்புடன் OIS உடன் 50MP முதன்மை வைட்-ஆங்கிள் லென்ஸ், 48MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 32MP டெலிஃபோட்டோ லென்ஸுடன் வருகிறது.


- தொலைபேசியில் முன்பக்கத்தில் 16MP முதன்மை கேமராவும் உள்ளது.


வெளியீட்டு நிகழ்வில், OnePlus குறைந்தது ஐந்து தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இது இதுவரை ஸ்னாப்டிராகன் ஜெனரல் 2 செயலியுடன் கூடிய OnePlus 11 மற்றும் 5G இணைப்புடன் OnePlus Pad ஐ வெளியிட்டுள்ளது.


மேலும் படிக்க | ChatGPT vs Bard: கூகுளின் சொந்த செயற்கை நுண்ணறிவு நுட்பம் விரைவில் அனைவருக்கும் சாத்தியம்
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ