இன்று வெளியாகிறது OnePlus 11, ஸ்ட்ரீமிங் ஈவன்ட்டை லைவில் பார்ப்பது எப்படி?

OnePlus 11 5G: இன்று ஒன்பிளஸ் பிரியர்களுக்கான மிக உற்சாகமான நாள். ஏனெனில் இன்று ஒன்பிளஸ் 11 இந்தியாவில் அறிமுகமாகயுள்ளது. மேலும் ஒன்பிளஸ் 11 வெளியீட்டு நிகழ்வை யூடியூப் மற்றும் ட்விட்டரில் நேரடியாகப் பார்க்க முடியும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 7, 2023, 11:04 AM IST
  • OnePlus 11 5G விலை & விற்பனை.
  • சாம்சங்கிற்கு போட்டியாக அறிமுகமாகும் OnePlus 11 5G.
  • இந்தியாவில் விரைவில்வெளியாக உள்ள ஒன்பிளஸ் 11.
இன்று வெளியாகிறது OnePlus 11, ஸ்ட்ரீமிங் ஈவன்ட்டை லைவில் பார்ப்பது எப்படி? title=

OnePlus 11 5G launch: OnePlus நிறுவனம் அதன் மிக அசத்தலான திறன் கொண்ட ஸ்மார்ட்போனை இன்று அறிமுகப்படுத்த உள்ளது, இதற்கு OnePlus 11 5G என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஜனவரி மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இன்று உலக முழுவதிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்வு கிளவுட் 11 என்று அழைக்கப்படுகிறது, மேலும் இந்த அறிமுக நிகழ்வு இன்று அதாவது பிப்ரவரி 7 ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு நடைபெறும். இது தவிர, இந்நிகழ்ச்சியில் நிறுவனம் புதிய TWS இயர்பட்கள் மற்றும் புதிய Q-சீரிஸ் டிவியையும் வெளியிடும். இதனுடன், டேப்லெட், ஒன்பிளஸ் பேட் மற்றும் மெக்கானிக்கல் கீபோர்டு ஆகியவையும் இந்த நிகழ்வில் அறிவிக்கப்படுத்தப்படும்.

ஸ்ட்ரீமிங் ஈவன்ட்டை லைவில் பார்ப்பது எப்படி
இந்த நிலையில் இந்த பிரம்மாண்ட கிளவுட் 11 நிகழ்வு OnePlus இன் உலகளாவிய மற்றும் இந்திய சமூக ஊடக கணக்குகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அதாவது யூடியூப் மற்றும் ட்விட்டரில் நீங்கள் நேரடியாகப் பார்க்க முடியும். அதன் பிறகு தயாரிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

மேலும் படிக்க | பிஎஸ்என்எல் ரூ. 769 ரீசார்ஜ் பிளான்: அன்லிமிடெட் அழைப்பு, டேட்டா... எக்கச்சக்க அம்சங்கள்

OnePlus 11 5G மற்றும் OnePlus 11R 5G
இப்போது நாம் அம்சங்களை பற்றி பேசுகையில், இது நிறுவனத்தின் முதல் Snapdragon 8 Gen 2 ஃபிளாக்ஷிப் போன் ஆகும். மேலும் OnePlus 11R 5G ஆனது Snapdragon 8 Plus Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படும். இரண்டும் கர்வ்ட் ஏஜ் உடன் 120Hz AMOLED டிஸ்ப்ளேவை ஆதரிக்கும். OnePlus 11 5G திரையின் இடது மூலையில் கேமரா கட்அவுட்டைக் கொண்டிருக்கும், அதே நேரத்தில் OnePlus 11R 5G நடுவில் பஞ்ச் ஹோல் கொண்டிருக்கும். அத்துடன் இந்த இரண்டு போன்களும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜைப் பெறலாம். மறுபுறம், பேட்டரி பற்றி பேசுகையில், 5000mAh பேட்டரி 100W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் கிடைக்கும். இந்த போன்கள் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்கும்.

OnePlus 11 5G மற்றும் OnePlus 11R 5G இன் கேமரா மற்றும் விலை
OnePlus 11 5G மற்றும் OnePlus 11R 5G இன் முன் கேமரா ஒரே மாதிரியாக இருக்கும், அதாவது 16MP சென்சார் கிடைக்கும் மற்றும் 50-மெகாபிக்சல் Sony IMX890 முதன்மை கேமரா இதில் இருக்கும். OnePlus 11 5G ஆனது 48MP அல்ட்ரா வைட் மற்றும் 32MP டெலிஃபோட்டோ கேமராவைப் பெறும். அதே நேரத்தில், OnePlus 11R 5G ஆனது 8MP அல்ட்ரா வைட் மற்றும் 2MP மேக்ரோ ஸ்னாப்பர் லென்ஸைப் பெறும். விலை பற்றி பேசுகையில், OnePlus 11 5Gயின் விலை சுமார் 55 ஆயிரம் ரூபாயாகவும், OnePlus 11R 5G விலை சுமார் 45 ஆயிரம் ரூபாயாகவும் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: அரசு வழங்கிய குட் நியூஸ்: ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி விலை குறையும், அள்ளிட்டு போகலாம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News