சீன தொழில்நுட்ப நிறுவனமான OnePlus தனது எதிர்பார்க்கப்பட்ட 5G-இயக்கப்பட்ட OnePlus சீரிஸான OnePlus 8 மற்றும் OnePlus 8 Pro ஆகியவற்றை சீனாவின் ஷென்சனில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் தகவல்களின்படி: OnePlus 8 Pro 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.78" QHD+ டிஸ்ப்ளே, 48MP பிரதான கேமரா கொண்ட குவாட்-கேமரா அமைப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC, 12GB ROM வரை மற்றும் 256GB உள் சேமிப்பு, 4,510mAh பேட்டரி, வார்ப் சார்ஜ் 30T, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் WiFi 6 ஆகியவற்றை கொண்டுள்ளது.


நிகழ்வின் நேரடி ஸ்ட்ரீமிங்கின் போது, ​​நிறுவனம் மற்றொரு தயாரிப்பான OnePlus 8-னையும் அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு சிறிய 6.55" டிஸ்ப்ளே, அதே செயலி மற்றும் சேமிப்பு, 4,300mAh பேட்டரி, பின்புறத்தில் ஒரு மூன்று கேமரா அமைப்பு 48 மெகாபிக்சலுடன் பிரதான கேமரா கொண்டுள்ளது. எனினும் இந்த புதிய சாதனம் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வரவில்லை.


OnePlus 8 பற்றி, அதிகாரப்பூர்வ வலைத்தளம் கூறுகையில் "OnePlus 8 நம்பமுடியாத காட்சி, சக்திவாய்ந்த வன்பொருள் மற்றும் சுமை இல்லாத மென்பொருளை மென்மையான பயனர் அனுபவத்திற்காக ஒருங்கிணைக்கிறது. இதற்கு முன் பார்த்திராத 120 Hz QHD+ AMOLED டிஸ்ப்ளே மூலம், OnePlus 8 Pro எதற்கு ஒரு புதிய தரத்தை அமைக்கிறது" என குறிப்பிட்டுள்ளது.


OnePlus 8 விலை பற்றி கூறுகையில்., 8GB/ 128GB மாடலுக்கு 699 அமெரிக்க டாலராகவும், 12GB/ 256GB பதிப்பிற்கு 799 அமெரிக்க டாலராகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வண்ண விருப்பங்கள் குறித்து பேசுகையில் Onyx Black, Glacial Green மற்றும் Interstellar Glow ஆகிய வண்ணங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், OnePlus 8 Pro 8GB / 128GB பதிப்பிற்கு 899 அமெரிக்க டாலராகவும், 12GB/ 256GB பதிப்பிற்கு 999 அமெரிக்க டாலராகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வண்ண விருப்பங்கள் குறித்து பேசுகையில் மற்றும் Onyx Black, Glacial Green மற்றும் Interstellar Glow ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. 


OnePlus 8 Pro-வைப் பற்றி, அதிகாரப்பூர்வ வலைத்தளம் மேலும் குறிப்பிடுகையில்., "தனிப்பயனாக்கப்பட்ட சோனி சென்சார் கொண்ட 48MP பிரதான கேமராவை OnePlus 8 Pro கொண்டுள்ளது. முழு 120 டிகிரி பார்வையுடன் 48MP அல்ட்ரா-வைட் லென்ஸ். 3x டெலிஃபோட்டோ லென்ஸ் இழப்பற்ற மற்றும் 30x டிஜிட்டல் ஜூம். மற்றும் ஒரு தனித்துவமான வண்ண வடிகட்டி கேமரா கொண்டுள்ளது" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த புதிய தொலைபேசிகளின் திறந்த விற்பனை ஏப்ரல் 29 முதல் அதிகாரப்பூர்வ OnePlus வலைத்தளம் மூலம் தொடங்கும். ஐரோப்பாவில் முன்கூட்டிய ஆர்டர்கள் இன்று முதல் நேரலையிலும், திறந்த விற்பனை ஏப்ரல் 21 முதல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.