இந்தியாவில் ஒன்ப்ளஸ்10 ப்ரோ அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக ஒன்ப்ளஸ் 9 மற்றும் ஒன்ப்ளஸ் 9 ப்ரோ ஆகியவை விலைக் குறைந்துள்ளது.  கடந்த மார்ச் 31ம் தேதி ஒன்ப்ளஸ் ஆனது ஒன்ப்ளஸ் 10 ப்ரோவின் வாரிசாக கருதப்படும், ஒன்ப்ளஸ் 9 ப்ரோ 5ஜியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.  இந்திய சந்தையில் கடந்த ஆண்டு ஒன்ப்ளஸ் 9 5ஜி மற்றும் 9 ப்ரோ 5ஜி ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மொபைல் நெட்வொர்க் இல்லாதபோது என்ன செய்ய வேண்டும்? இதோ டிப்ஸ் 


ஒன்ப்ளஸ் 9 சீரிஸ் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்டை பெற்றுள்ளதோடு, இது ஹாசல்பிளாட் மூலம் டியூன் செய்யப்பட்ட கேமராக்களை கொண்டுள்ளது.  இந்திய சந்தையில் ஒன்ப்ளஸ் 9 5ஜி மற்றும் ஒன்ப்ளஸ் 9 ப்ரோ போன்றவை கிட்டத்தட்ட ரூ.5,000 அளவில் விலை குறைக்கப்பட்டுள்ளது.  8ஜிபி + 128ஜிபி வேரியண்ட் கொண்ட ஒன்ப்ளஸ் 9 5ஜி ரூ. 44,999-லிருந்து ஆரம்பமாகிறது மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்ப்ளஸ் 9 5ஜி ரூ.49,999க்கு விற்கப்படுகிறது.  இத்தகைய விலை குறைக்கப்பட்ட இந்த மொபைல்கள் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், அமேசானிலும் கிடைக்கிறது.



இந்தியாவில் 8ஜிபி + 128ஜிபி வேரியண்ட் கொண்ட ஒன்ப்ளஸ் 9 ப்ரோவின் விலை ரூ.59,999 ஆகவும், 12ஜிபி + 256ஜிபி மாடலின் விலை ரூ.64,999 ஆகவும் குறைந்துள்ளது.  ஒன்ப்ளஸ் 10 ப்ரோ வெளியீட்டு விழா நிகழ்ச்சி நேற்றைய தினம் (மார்ச் 31) அன்று இரவு 7:30 மணிக்கு அறிமுகப்படுத்தப்படது.  சீனாவில் சில மாதங்களுக்கு முன்னர் ஒன்ப்ளஸ் 10 ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த மொபைல் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.  மேலும் இது குவாட்-ஹெச்டி + அமோல்ட் டிஸ்ப்ளே மற்றும் 120Hz வரை அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்டைக் கொண்டுள்ளது.



இந்த வகை ஒன்ப்ளஸ் 10 ப்ரோ மொபைலில் 48 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் சென்சார் போன்ற மூன்று பின்புற கேமராவைக் கொண்டுள்ளது.  அதிவேக சார்ஜிங் வசதியுடன் 5000எம்எஹெச் பேட்டரியை கொண்டிருப்பதோடு, இது 80W வேகமாக சார்ஜிங்கை ஆதரிக்கிறது.


மேலும் படிக்க | சந்தையை கலக்க வருகிறது ரூ.10,000-க்கும் குறைவான அசத்தல் போன்: கசிந்த விவரங்கள் இதோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR