ஒன்பிளஸ் நார்டு 6.43 இன்ச் 90 Hz refresh rate உடன் ஒரு செம்மையான AMOLED டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு 2 மாடலில் 6.43 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், 50 MB பிரைமரி கேமரா, 32 MB செல்பி கேமரா, 4500 M.A.H பேட்டரி வழங்கப்படுகிறது.



ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கியது முதல் பல்வேறு சர்ச்சைகளை அந்நிறுவனம் எதிர்கொண்டு வருகிறது. ஒன்பிளஸ் நார்டு பயன்படுத்துவோரில் சிலர், தங்களின் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.


ஒன்பிளஸ் பயனர் ஒருவர் தனது மனைவியின் நார்டு 2 ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக தனது ட்விட்டரில் பதிவிட்டார்.தனது பதிவில் வெடித்து சிதறியதால் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே, பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் தெளிவாக தெரியும் படி புகைப்படங்களையும் அவர் இணைத்து இருந்தார். பயனர் குற்றச்சாட்டுக்கு ஒன்பிளஸ் பதில் அளித்துள்ளது.  அந்த வரிசையில், ஸ்மார்ட்போனினை தொடர்ந்து ஒன்பிளஸ் நார்டு 2 வார்ப் சார்ஜர் வெடித்து சிதறியது. இந்த சம்பவம் கேரளாவில் அரங்கேறி இருக்கிறது.



ஸ்மார்ட்போனை சார்ஜருடன் இணைத்த சில நிமிடங்களிலேயே சார்ஜர் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒன்பிளஸ் நிறுவனத்தை ட்விட்டரில் தொடர்பு கொண்டார்.


இந்த சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஒன்பிளஸ், மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சார்ஜர் வெடித்து சிதறியது என தெரிவித்து இருக்கிறது. தற்போது வெடித்து சிதறிய சார்ஜருக்கு மாற்றாக ஒன்பிளஸ் சார்பில் வேறு சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .


ALSO READ Cheapest Smartphones: ரூ. 10,000-க்கும் கீழ் கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR