’ரத்தன் டாடா ஆசீர்வாதம்’ ஆன்லைன் டீசல் விற்பனையில் அசத்தும் தம்பதி
ரத்தன் டாடா ஆசிர்வாதத்தால் புனேவைச் சேர்ந்த தம்பதி, ஆன்லைனில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்து அசத்தி வருகின்றனர்.
ஆன்லைன் வர்த்தகத்துக்கான சந்தை இந்தியாவில் மிகப்பெரிய அளவில் உருவாகியிருக்கிறது. இதில் விற்பனையாகாத பொருட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.பெட்ரோல், டீசல் கூட ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த தகவல் உங்களுக்கு ஆச்சரியமாக கூட இருக்கலாம். ஆனால், இதனை சாத்தியப்படுத்தி காட்டியிருகின்றனர் புனேவைச் சேர்ந்த தம்பதி.
மேலும் படிக்க | Amazon Prime Day 2022: தள்ளுபடி மழை, அனைத்து பொருட்களிலும் பம்பர் சலுகைள்
25 வயதாகும் அதிதி போசலே வாலுஞ்ச் மற்றும் அவரது கணவர் சேத்தன் வாலுஞ்ச் ஆகியோர் இந்த முயற்சியை எடுத்து, சாத்தியப்படுத்தி காட்டியிருக்கின்றனர். குடும்பத்தின் பெட்ரோல் பங்க் வர்த்தகத்தை இருவரும் கையில் எடுத்துள்ளனர். அப்போது, புனேவுக்கு அருகில் இருக்கும் சிறுகுறு நிறுவனங்களுக்கு தேவையான பெட்ரோல் மற்றும் டீசலை 15 நாள் கடன் என்ற அடிப்படையில் டோர் டெலிவரி செய்யத் தொடங்கினர். கொரோனா காலத்தின்போது இவர்களிடம் ஆர்டர் குவிந்துள்ளது. அனைத்து ஆர்டர்களுக்கும் சரியாக டோர் டெலிவரி செய்து பேமெண்ட் பெற்ற தம்பதி, ஆன்லைன் மூலம் பெட்ரோல், டீசலை விற்பனை செய்யும் ஐடியாவை கையில் எடுத்தனர்.
இதற்கு அவர்களுக்கு நிதி தேவைப்பட்டது. உடனடியாக இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடாவை நேரில் சந்தித்து தங்களின் ஐடியாவை விளக்கியுள்ளனர். அவரும் ஒப்புக்கொண்டு நிதி முதலீடு செய்தார். இதன்பின்னர் அவர்களின் ஆன்லைன் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் வணிகம் அடுத்தக்கட்டத்தை எட்டியது. Repos என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினர். இதில் ரத்தன் டாடாவின் முதலீட்டுடன் தொடங்கப்பட்ட வணிகம் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே சென்றது.
குறைந்தபட்சம் 100 லிட்டர் தேவைப்படும் நிறுவனங்களுக்கு நேரடியாக டோர் டெலிவரி செய்கின்றனர். பிஸினஸ் எல்லை விரிவடைந்து கொண்டே செல்வதால், அடுத்ததாக டெல்லியில் இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதியும் பெற்றுள்ளனர். வணிகத்துக்கு தேவையான முதலீட்டை திரட்டுவதிலும் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். தம்பதி அதிதி போசலே வாலுஞ்ச் மற்றும் அவரது கணவர் சேத்தன் வாலுஞ்ச் முயற்சிக்கு முன்னணி தொழில் நிறுவனங்களும் ஆதரவு கரம் நீட்டத் தொடங்கியிருக்கின்றனர். தற்போது நாடு முழுவதும் 220 நகரங்களுக்கு அவர்களால் ஆன்லைன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசலை டோர் டெலிவரி செய்ய முடியும்.
சிறு குறு நிறுவனங்களைக் கடந்த மருத்துவமனை, ஹோட்டல், கட்டுமான நிறுவனங்கள், சுரங்க நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் பெட்ரோல் டீசலை விநியோகம் செய்து வருகின்றனர். பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து தேவையான பெட்ரோல் மற்றும் டீசலை நேரடியாகவும் கொள்முதல் செய்துகொள்கின்றனர். Repos ஸ்டார்ட் அப் நிறுவனம் அடுத்தக்கட்டமாக 37.5 மில்லியன் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. எங்கு பெட்ரோல், டீசல் தேவைப்பட்டாலும் ஆன்லைன் மூலம் ஆர்டர் எடுத்து டெலிவரி செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | Mobile Charging: மின்னல் வேகத்தில் மொபைல் சார்ஜ் ஆக 5 டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ