OPPO Find X3 Photographer Edition: Oppo நிறுவனம் Find X3 Photographer Edition பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் சீனாவில் இதை அறிமுகம் செய்துள்ளது. Oppo Find X3 Photographer Edition. கோடக் 35 கேமராவைப் போல தோற்றமளிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் பின்பக்க பேனலில் எலக்ட்ரோபிளேட்டட் சில்வர் பெயிண்டுடன் மெடாலிக் கிளாஸ் பகுதி உள்ளது. மீதமுள்ள பகுதி, உறுதியான பிடிக்கு உதவும் தோலால் ஆனது. ஸ்பெக்சைப் பொறுத்தவரை, இது வழக்கமான OPPO Find X3 Pro இலிருந்து வேறுபட்டதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


OPPO Find X3 Photographer Edition: விவரக்குறிப்புகள்


OPPO Find X3 Photographer Edition-ல் 6.7 அங்குல LTPO AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இது Quad HD+ ரெசல்யூஷன் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கிறது. இதில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. சாதனத்தின் பின்புறம் OIS ஆதரவுடன் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா, 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ், 13 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 3 மெகாபிக்சல் மைக்ரோஸ்கோபிக் கேமரா ஆகியவை உள்ளன.


ALSO READ: சூப்பர் தள்ளுபடி விலையில் iPhone 13 வாங்க வாய்ப்பு: அதிரடி சலுகை, மிஸ் செஞ்சிடாதீங்க


OPPO Find X3 Photographer Edition: பேட்டரி


ஸ்னாப்டிராகன் 888 மொபைல் இயங்குதளம் OPPO Find X3 Photographer Edition-ஐ இயக்குகிறது. இது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்ளமைக்கப்பட்ட ஸ்டோரேஜுடன் வருகிறது. இதில் 4,500mAh பேட்டரி உள்ளது. இந்த பேட்டரி 65W வேகமான சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான, ColorOS 12-ல் இயங்கும் ஒப்போவின் முதல் ஸ்மார்ட்போன் (Smartphone) இதுவாகும்.


OPPO Find X3 Photographer Edition: விலை


OPPO Find X3 Photographer Edition-ன் விலை சீனாவில் 6,499 யுவான் (ரூ. 73,826) ஆக நிர்ணயிக்கப்பட்டுளது. சீனாவுக்கு வெளியே, மற்ற நாடுகளில் உள்ள சந்தைகளில், நிறுவனம் வரையறுக்கப்பட்ட பதிப்பு மாதிரியை வெளியிடுமா என்பது தெளிவாக இல்லை.


ALSO READ: 7000mAh கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR