சூப்பர் தள்ளுபடி விலையில் iPhone 13 வாங்க வாய்ப்பு: அதிரடி சலுகை, மிஸ் செஞ்சிடாதீங்க

ஆப்பிளின் iPhone 13 தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்தத் தொடருக்கான முன்பதிவு செப்டம்பர் 17 முதல் தொடங்கியது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 21, 2021, 03:41 PM IST
  • ஆப்பிளின் iPhone 13 தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • ஆப்பிள் இந்த தொடரில் iPhone 13 Mini, iPhone 13, iPhone 13 Pro மற்றும் iPhone 13 Pro Max மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஆப்பிளின் ஐபோன் 13 சீரிஸ் ரூ. 69,900 இல் தொடங்குகிறது.
சூப்பர் தள்ளுபடி விலையில் iPhone 13 வாங்க வாய்ப்பு: அதிரடி சலுகை, மிஸ் செஞ்சிடாதீங்க  title=

Apple iPhone 13: ஆப்பிளின் iPhone 13 தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்தத் தொடருக்கான முன்பதிவு செப்டம்பர் 17 முதல் தொடங்கியது. செப்டம்பர் 24 முதல் நான்கு புதிய ஐபோன்கள் கிடைக்கத்  தொடங்கும்.

ஆப்பிள் இந்த தொடரில் iPhone 13 Mini, iPhone 13, iPhone 13 Pro மற்றும் iPhone 13 Pro Max மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொலைபேசிகளின் விலை அதிகமாக இருந்தாலும், இவற்றை மலிவாக வாங்க பல சலுகைகளும் தள்ளுபடிகளும் கிடைக்கின்றன. iPhone 13 Pro மற்றும் iPhone 13 Pro Max-ல் கிடைக்கும் சலுகையில் நீங்கள் 8 ஆயிரம் ரூபாய் மலிவாகப் இவற்றைப் பெறலாம். இந்த புதிய நான்கு போன்களின் விலை மற்றும் சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

iPhone 13 சீரிஸ்: விலை விவரம்

ஆப்பிளின் ஐபோன் 13 (iPhone 13)சீரிஸ் ரூ. 69,900 இல் தொடங்குகிறது. அதிகபட்சமாக, புரோ மேக்ஸின் விலை ரூ .1,29,900 ஆக உள்ளது. ஐபோன் 13 மினியின் 128 ஜிபி வேரியன்ட் விலை 69,900 ரூபாய் மற்றும் 256 ஜிபி வேரியன்டின் விலை 79,900 ரூபாயகும். 512 ஜிபி பதிப்பின் விலை ரூ .99,900 ஆக உள்ளது. ஐபோன் 13 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ .79,900 ஆகவும், 256 ஜிபிக்கு ரூ .89,900 ஆகவும் 512 ஜிபிக்கு ரூ .1,09,900 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: நம்ப முடியாத விலையில் iPhone 12, iPhone 12 mini: Amazon, Flipkart-ல் அதிரடி சலுகை, தள்ளுபடி

ஐபோன் 13 ப்ரோ சீரிஸ் 128 ஜிபி ரூ .1,19,900 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. மற்ற சேமிப்பு வகைகளின் விலைகள் ரூ .1,29,900 (256 ஜிபி), ரூ .1,49,900 (512 ஜிபி) மற்றும் 1,69,900 (1 டிபி ) ஆக உள்ளன. ப்ரோ மேக்ஸ் 128 ஜிபி ஸ்டோரேஜுக்கு ரூ. 1,29,900, 256 ஜிபிக்கு ரூ. 1,39,900, 512 ஜிபிக்கு ரூ .1,59,900 இல் தொடங்குகிறது. ஐபோன் 13 ப்ரோ மேக்ஸின் 1 டிபி பதிப்பின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இதன் விலை ரூ. 1,79,900 ஆகும்.

iPhone 13 Pro மற்றும் iPhone 13 Pro Max-ல் கிடைக்கும் சலுகைகள்

வாடிக்கையாளர்கள் HDFC வங்கி (HDFC Bank) காட்டைப் பயன்படுத்தி iPhone 13 Pro மற்றும் iPhone 13 Pro Max ஐ வாங்கினால், 5,000 ரூபாய் கேஷ்பேக் பெறலாம். கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் கூடுதல் பரிமாற்ற தள்ளுபடியும் வழங்கப்படும். பழைய கைபேசியைக் கொடுத்து புதிய ஐபோன் மாடலை வாங்குவதற்கு மூன்று ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.

iPhone 13 போனின் ப்ரீ-ஆர்டரில் ரெகார்ட் ஆர்டர்களை பெற்றது ஆப்பிள்

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் 13 தொடரின் ப்ரீ-ஆர்டர் செப்டம்பர் 17 அன்று இந்தியாவில் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டைப் போலவே இப்போதும் இந்த போனுக்கு சாதனை அளவில் ஆர்டர்கள் கிடைத்துள்ளன என நம்பகமான சில்லறை வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டின் பண்டிகை காலாண்டில் ஐபோன் 12 செய்த சாதனை விற்பனை போலவே இந்த ஆண்டிலும் ஐபோன் 13 தொடர் சாதனை விற்பனையைக் காணும் என தொழில் வல்லுனர்கள் நம்புகிறார்கள்.

ALSO READ: விலை குறையும் ஐபோன்கள்! ஆர்வத்தில் மக்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News