Oppo Reno 12 Launch Date In India Announced: இந்திய ஸ்மார்ட்போன் சந்தை என்பது உலகிலேயே இரண்டாவது பெரியது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். சீனா ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் நிலையில், சீனாவுக்கு அடுத்த பல்வேறு புதுப்புது மாடல் ஸ்மார்ட்போன்கள் அனைத்து விதமான வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாதாமாதம் பல மொபைல்கள் இந்திய சந்தையில் கால் பதிக்கின்றன. பட்ஜெட் விலையில் அதாவது 10 ஆயிரம் ரூபாயில் இருந்து தற்போது 5ஜி மொபைல்கள் இந்தியாவில் கிடைக்கின்றன. மேலும் காஸ்ட்லியான மொபைல்கள் இந்தியாவில் அறிமுகமாகின்றன. குறிப்பாக பல மொபைல்கள் இந்தியாவில் கால் பதிக்கும் முன் பல்வேறு நாடுகளில் அறிமுகமாகிவிடும்.


நிறைந்திருக்கும் AI அம்சங்கள்


அந்த வகையில், பிரபல ஸ்மார்ட்போன் நிறவனமான Oppo அதன் Reno 12 சீரிஸை கடந்த சில வாரங்களுக்கு முன் உலகச் சந்தையில் இறக்கியது. இந்த Oppo Reno 12 சீரிஸில் Oppo Reno 12 5G மற்றும் Oppo Reno 12 Pro 5G என இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. இது எப்போது இந்தியாவுக்கு வரும் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்த சூழலில், Oppo நிறுவனம் அதன் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.


மேலும் படிக்க | உச்சகட்ட எதிர்பார்ப்பில் பஜாஜ் CNG பைக்... மைலேஜ் முதல் விலை வரை - விடிஞ்சா தெரிஞ்சிரும் விவரம்!


50MP கேமரா, 500mAh பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு என பல உயர் ரக அம்சங்களை கொண்டுள்ள இந்த மொபைல் வரும் ஜூலை 12ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் இந்த மொபைலில் உள்ள சிறப்பம்சங்களை விரிவாக இதில் காணளாம். முன்னரே, இந்த Oppo Reno 12 சீரிஸ் முழுவதும் செயற்கை நுண்ணறிவை கொண்ட அம்சங்கள் நிறைந்திருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. அந்த வகையில், இதில் AI Eraser 2.0, AI Clear Face, AI Best Face, AI Summary என செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் இதில் கிடைக்கின்றன. 


முக்கிய அம்சங்கள் என்னென்ன?


இந்த Oppo Reno 12 சீரிஸில் உள்ள இரண்டு வேரியண்ட்களும் BeaconLink தொழில்நுட்பம் கொண்டவை. இதில் நெட்வோர்க் கிடைக்காதபோதும் கூட மற்றொருவடன் பேச வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் ப்ளூடூத் மூலம் நீங்கள் பேசலாம். உதாரணத்திற்கு நெட்வோர்க்கே கிடைக்காத இடங்களில் வாக்கி டாக்கி போல் இதனை பயன்படுத்தலாம். 


Oppo Reno 12 சீரிஸில் 5000mAh பேட்டரி மற்றும் 80W SuperVOCC பிளாஷ் பேட்டரியுடன் வருகிறது. இதனால் இந்த மொபைல் பேட்டரி 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் ஆக வெறும் 46 நிமிடங்களையே எடுத்துக்கொள்ளும். இதில் 6.7 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே உடன் வருகிறது. 120Hz ரெப்ரேஷ் ரேட் இதில் உள்ளது. இதில் பின்புறம் மூன்று கேமரா அமைப்பும் (50MP+8MP+2MP), முன்புற செல்ஃபி கேமரா 32MP உடன் உள்ளது. 


விலை எவ்வளவு?


இன்னும் இந்த மொபைலின் விலை என்ன என்பது தெரியவில்லை. இதற்கான விலை வரும் ஜூலை 12ஆம் தேதிதான் தெரியும். சீன யுவான் மதிப்பில் Oppo Reno 12 மற்றும் Oppo Reno 12 Pro முறையே 2,699 மற்றும் 3,399 CNY ஆகும். அதாவது இந்திய மதிப்பில் முறையே 30 ஆயிரம் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ஆகும். 


மேலும் படிக்க | தற்கொலை செய்துகொண்ட ரோபா... ஓவர்டைம் வேலை பார்த்ததால் விபரீத முடிவா...?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ