எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் OPPO-வின் புதிய 5ஜி போன்..! விலை மட்டும் பாக்காதீங்க
புது வரவாக மார்க்கெட்டில் களமிறங்கியிருக்கும் ஓப்போவின் 5 ஸ்மார்ட்போன் டிசைனிலேயே கவர்ந்தாலும், அதில் இருக்கும் அம்சங்களும் வாடிக்கையாளர்களை ஏமாற்றாது என நம்பலாம். 30 ஆயிரம் ரூபாய் பட்ஜெட் இருந்தால், இந்த போனை நீங்கள் வாங்கலாம்.
புத்தாண்டு, பொங்கல் விடுமுறை எல்லாம் முடிந்திருந்தாலும் ஒரு நல்ல ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற தேடிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். எந்த போனை பார்த்தாலும் சிலருக்கு ஒவ்வாமை இருக்கும். காரணம் இந்த போனில் நல்ல ப்யூச்சர் இருக்குமா? எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா? என்ற கேள்வி மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கும். அவர்களை திருப்திபடுத்தவே முடியாது என்றாலும், ஓரளவுக்கு அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இப்போது மார்க்கெட்டில் களமிறங்கியிருக்கும் மொபைல் தான் ஓப்போ நிறுவனத்தின் Oppo Reno 8T 5G ஸ்மார்ட்போன்.
இதனுடைய டிசைன் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விலையும் மீடியம் ரேஞ்சில் இருக்கிறது என்பதால், புதிய மொபைல் வாங்கும் எண்ணத்துடன் இருப்பவர்கள், Oppo Reno 8T 5G ஸ்மாரட்போனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம். அதனுடைய சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட விவரங்களை முழுமையாக தெரிந்து கொண்டபிறகு வாங்குவதை பற்றி யோசிப்பது சிறந்தது என்பதால், Oppo Reno 8T 5G மொபைலின் சிறப்பம்சங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Oppo Reno 8T 5G வடிவமைப்பு
OPPO நிறுவனம் இந்தியாவில் ரெனோ 8 சீரிஸின் மற்றொரு மொபைலான Oppo Reno 8T 5G-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. வடிவமைப்பில் சற்று வித்தியாசத்தை காண்பித்திருக்கும் இந்த போன், எளிமையாக மக்களிடம் ரீச்சானதற்கு இது ஒரு முக்கிய காரணம். முந்தைய மாடல்களைவிட கலர் மற்றும் லுக்கில் சிறிய மாற்றங்களை செய்துள்ளது.
மேலும் படிக்க | ரூ 895 ரீசார்ஜ்..1 வருட வேலிடிட்டி..அள்ளிக்கொடுக்கும் ஜியோ
Oppo Reno 8T 5G விலை
Oppo Reno 8T 5G இன் 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை இந்தியாவில் ரூ.29,999 ஆகும். இது பிளிப்கார்ட் மற்றும் ஒப்போவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்கூட்டியே புக்கிங் செய்து, ஆர்டரின் பேரில் வாங்கிக் கொள்ளலாம்.
Oppo Reno 8T 5G விவரக்குறிப்புகள்
Oppo Reno 8T 5G மைக்ரோ வளைந்த வடிவமைப்புடன் வருகிறது. இது 171 கிராம் எடையை கொண்டிருக்கும். போனில் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. திரை Dragontrail-Star2 பாதுகாப்புடன் வருகிறது. ஃபோனின் பின்புறத்தில் இரட்டை கேமரா தொகுதி உள்ளது.
Oppo Reno 8T 5G கேமரா
108MP இன் முதன்மை சென்சார் Oppo Reno 8T 5G இல் கிடைக்கிறது. அதே நேரத்தில், முன்புறத்தில் 32MP சென்சார் உள்ளது. இந்த போன் Qualcomm Snapdragon 695 5G SoC மூலம் இயக்கப்படுகிறது. OPPO இன் ரேம் விரிவாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரேமை 8ஜிபி வரை விரிவாக்க முடியும். தொலைபேசி ColorOS 13 இல் இயங்குகிறது. இந்த போனில் 4800எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ