அரசு வழங்கிய குட் நியூஸ்: ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி விலை குறையும், அள்ளிட்டு போகலாம்!!

Smartphone Prices After Budget 2023: இந்தியாவின் மொபைல் போன் உற்பத்தி, 2014-15ல் 58 மில்லியன் யூனிட்களாக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் 310 மில்லியன் யூனிட்களாக அதிகரித்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 3, 2023, 12:52 PM IST
  • தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் மீதான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • ஆய்வகங்களில் உருவாக்கப்படும் வைரங்களை விளம்பரப்படுத்த சுங்க வரி விலக்கு அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
  • சுங்க வரி குறைப்பு, பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்திற்கும் ஊக்கமளிக்கும் என்று நிதியமைச்சர் கூறினார்.
அரசு வழங்கிய குட் நியூஸ்: ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி விலை குறையும், அள்ளிட்டு போகலாம்!!

நேற்று முன்தினம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற அரசு முயற்சித்துள்ளது. அதே சமயம், இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு பல புதிய திட்டங்களையும் தொடங்கியுள்ளது. மக்களுக்காக அரசு நடத்தும் பழைய திட்டங்களில் சில முக்கிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டாலும், அதில் எந்த மாற்றத்தையும் அரசு செய்யவில்லை.

இதற்கிடையில் இந்திய அரசு ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. மொபைல் போன்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் கேமரா லென்ஸ்கள் மற்றும் இதர பாகங்கள் போன்ற சிலவற்றின் இறக்குமதிக்கு சுங்க வரி விலக்கு அளிப்பதாக அரசாங்கம் புதன்கிழமை அறிவித்தது. எளிமையாகச் சொன்னால், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் இனி மலிவாகக் கிடைக்கும். இது தவிர, லித்தியம் அயன் பேட்டரிகள் மீதான வரி விலக்கு மேலும் ஓராண்டுக்கு தொடரும்.

பொது பட்ஜெட்டில் நல்ல செய்தி கிடைத்தது

மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான சுங்க வரியை 13 சதவீதமாக குறைக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை முன்மொழிந்தார். 2023-24ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றிய அவர், மின்சார வாகனங்களை மலிவாக மாற்றும் அறிவிப்பை வெளியிட்டார். இது தவிர, மொபைல், தொலைக்காட்சி, புகைபோக்கி உற்பத்திக்கும் சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | WhatsApp! ரீசார்ஜ் செய்யாமல் அன்லிமிடெட் காலிங் செய்ய முடியும்.. வருகிறது புதிய வசதி!

சிகரெட் விலை உயர்ந்தது

இவற்றை தவிர, சிகரெட் மீதான தேசிய பேரிடர் தற்செயல் வரி (NCCD) பட்ஜெட்டில் 16 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன் உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் மீதான சுங்க வரியை குறைப்பதாக நிதியமைச்சர் அறிவித்தார். இந்தியாவின் மொபைல் போன் உற்பத்தி, 2014-15ல் 58 மில்லியன் யூனிட்களாக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் 310 மில்லியன் யூனிட்களாக அதிகரித்துள்ளது.

தங்கம் விலை உயர்ந்தது

தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் மீதான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆய்வகங்களில் உருவாக்கப்படும் வைரங்களை விளம்பரப்படுத்த சுங்க வரி விலக்கு அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார். சுங்க வரி குறைப்பு, பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்திற்கும் ஊக்கமளிக்கும் என்று நிதியமைச்சர் கூறினார்.

மேலும் படிக்க | வாங்குனா இப்படி ஒரு போனை வாங்கணும்...அறிமுகமானது Samsung Galaxy S23

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News