அட்டகாசமான புதுவித கேமரா தொழில்நுட்பம் அறிமுகம் செய்தது ஒப்போ நிறுவனம்
ஒப்போ நிறுவனம் புதிய தலைமுறை அன்டர் ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பத்தை புதிதாக அறிமுகம் செய்து இருக்கிறது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய தலைமுறை ஸ்மார்ட்போன் சாதனம் அன்டர் ஸ்கிரீன் கேமரா அம்சத்துடன் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பம் புகைப்படங்களின் தரம் குறையாமல் செல்பிக்களை எடுக்க வழி செய்யும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ (Oppo) அன்டர் ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பங்கள் புகைப்படங்களின் பிக்சல்களை குறைத்தது. அன்டர் ஸ்கிரீன் கேமரா அம்சத்தை முழுத்திரை அனுபவத்தைக் காண்பிப்பதற்காக நிறுவனம் அதன் டிஸ்பிளேவில் முழுமையாக பிரதிபலிக்கும் ஒரு இ-ரீடர் செயலியை இயக்கும் முன்மாதிரியை டிஸ்பிளேவில் காட்டியுள்ளது.
ALSO READ | Motorola Defy அட்டகாச அறிமுகம்: கீழே போட்டாலும், நீரில் விழுந்தாலும் ஒன்றும் ஆகாது
ஒப்போ நிறுவனம் டிஸ்பிளேவின் கேமரா பகுதியில் அதே 400 PPI அடர்த்தியையும், ஆக்சன் 20 ஐ விட சிறந்த கேமரா தரத்தையும் வழங்குவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. டிஸ்ப்ளே பயன்பாட்டின் போதும், இந்த கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒப்போ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.
அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பத்தை ஒப்போ நிறுவனம் நீண்ட காலமாக உருவாக்கி வருகிறது. முதல்முறையாக இந்த தொழில்நுட்பத்தை ஒப்போ நிறுவனம் 2019 ஆண்டு ஷாங்காய் நகரில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது.
நாள்பட்ட பயன்பாட்டில் பயனர்களால் ஸ்கிரீனின் கீழ் உள்ள கேமரா பகுதியை பார்க்கவே முடியாது. இதனால் தலைசிறந்த அனுபவம் கிடைக்கும். டிஸ்ப்ளே பயன்பாட்டின் போதும், இந்த கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒப்போ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.
ஒப்போ நிறுவனம் நீண்ட நாட்களாக இந்த தொழில்நுட்பத்துடன் செயல்பட்டு வருகிறது. இதுவரை ஒப்போ ஸ்மார்ட்போன்களில் இந்த அம்சம் வழங்கப்படாமல் இருந்தது. ஆனால், இப்போது நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அதன் அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த புதிய அம்சம் எந்த ஸ்மார்ட்போன் மாடல் சாதனத்தில் அறிமுகம் செய்யப்படும் என்பது தெரியவில்லை. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ALSO READ | Smartphones: ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் சூப்பரான போன்கள் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR