PAN எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு; இதுதான் கடைசி?
நிரந்தர கணக்கு எண்ணை (பான்) ஆதார் உடன் இணைப்பதற்கான இறுதி நாள் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
புதுடில்லி: நிரந்தர கணக்கு எண்ணை (பான்) ஆதார் உடன் இணைப்பதற்கான இறுதி நாள் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த காலக்கெடு 31 டிசம்பர் 2019 அன்று என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த காலக்கெடுவை அதிகரித்து, வருமான வரிச் சட்டம் (IT) 1961 சட்டப்படி பிரிவு 139 ஏ இன் பிரிவு 2 இன் கீழ் இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
PAN உடன் ஆதார் இணைப்பதற்கான காலக்கெடு அதிகரிக்கப்பட்டுள்ளது, செய்யாவிட்டால், உங்கள் வருமானம் சிக்கிவிடும்
பான்-ஆதார் எவ்வாறு இணைக்க முடியும்:
- முதலில், நீங்கள் வருமான வரி மின் வலைத்தளத்திற்குச் சென்று www.incometaxindiaefiling.gov.in ஐக் கிளிக் செய்ய வேண்டும்.
- கிளிக் செய்த பிறகு, பக்கத்தில் சிவப்பு நிற கிளிக் பட்டன் இருக்கும். இதில் "இணைப்பு ஆதார்" எழுதப்பட்டிருக்கும்.
- ஏற்கனவே உங்களுக்கு கணக்கு இல்லையென்றால், நீங்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு, உங்களுக்கு முன்னால் புதிய பக்கம் திறக்கும்.
- உள்நுழைய விவரங்களை இட்ட பிறகு, ஆதார் அட்டையை இணைக்கும் பக்கம் திறக்கும்.
- பக்கம் திறந்த பிறகு, கொடுக்கப்பட்ட பிரிவில் நீங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை நிரப்ப வேண்டும்.
- அதை நிரப்பிய பின், உங்கள் பான் எண் மற்றும் ஆதார் எண் இணைக்கப்படும்.
எஸ்எம்எஸ் வழியாகவும் இணைக்க முடியும்:
இணையதளத்தில் ஆதார் மற்றும் பான் இணைப்பதில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால், கவலைப்பட தேவையில்லை. உங்கள் மொபைலில் இருந்து ஒரு எஸ்எம்எஸ் மூலமாகவும் இதைச் செய்யலாம். வருமான வரித் துறையின் கூற்றுப்படி, 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் (SMS) அனுப்புவதன் மூலம், பான் மற்றும் ஆதார் எண் இணைக்கப்படும்.
மத்திய அரசின் முதன்மை திட்டத்தின் கீழ் ஆதார் செயல்படுத்தப்பட்டது. பயோமெட்ரிக் ஐடி மூலமாக மட்டுமே வருமான வரி தாக்கல் செய்ய முடியும் என்றும் அதன் மூலம் பான் எண்ணும் வழங்கப்படும் என்றும் ஐடி துறை தெரிவித்துள்ளது. பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்காதவர்களின் வருமான வரி திருப்பிச் செலுத்துவது சிக்கல் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது