புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவிப்பு ..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு (Narayanasamy government) பெரும்பான்மையை இழந்தது என்று அவைத் தலைவர் அறிவித்துள்ளார். இதன் மூலம், புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி (Narayanasamy) தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. புதுவை சட்டப்பேரவையில் இன்று சிறப்புக் கூட்டம் காலை 10 மணிக்குக் கூடியது. அப்போது, பேரவையில் நம்பிக்கை வாக்கு (floor test) கோரும் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்து பேசினார். 


பின்னர் முதல்வர் நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததாக அவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததை அடுத்து, முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு (walks out of Assembly) செய்தனர். அப்போது அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 14 பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். இதையடுத்து, நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக அவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார்.



இது குறித்து முதல்வர் நாராயணசாமி (CM Narayanasamy) கூறுகையில், "மாநில பட்ஜெட்டில் அறிவித்ததில் 95 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளோம். ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி நடைபெற்றுவருகிறது. தேர்தல் வாக்குறுதியை (Election promise) காப்பாற்றிய பெருமை எங்கள் அரசுக்கு உண்டு. மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எவ்வளவு இக்கட்டு வந்தாலும் புதுச்சேரி மக்களுக்காக தொடர்ந்து போரோடினோம்.


ALSO READ | புதுச்சேரியில் கன மழை, பள்ளிகள் விடுமுறை: இன்னும் இரு நாட்களுக்கு மழை நீடிக்கும்: IMD


மக்களால் புறக்கணிப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கிறார்கள். மாநிலத்தை வருமானத்தை குறைக்க வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டினார்கள். புதுச்சேரி (Puducherry) மாநிலத்துக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை. நான்கு ஆண்டுகளாக எங்களை எதிர்கொள்ள முடியாத எதிர் கட்சிகள் தற்போது அஸ்திரத்தை எடுக்கின்றனர். எங்களது உறுப்பினர்கள் ஒற்றுமையால் ஆட்சி 5 ஆண்டுகள் செயல்பட்டது. புதுச்சேரி மாநிலம் மட்டும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறது.


மக்களால் புறக்கணிப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கிறார்கள். மாநிலத்தை வருமானத்தை குறைக்க வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டினார்கள். புதுச்சேரி மாநிலத்துக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை. நான்கு ஆண்டுகளாக எங்களை எதிர்கொள்ள முடியாத எதிர் கட்சிகள் தற்போது அஸ்திரத்தை எடுக்கின்றனர். எங்களது உறுப்பினர்கள் ஒற்றுமையால் ஆட்சி 5 ஆண்டுகள் செயல்பட்டது. புதுச்சேரி மாநிலம் மட்டும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறது.


பலமுறை போராடியும் புதுச்சேரிக்கு மாநில அந்துஸ்து கொடுக்க மத்திய அரசு மறுக்கிறது. கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு முழுமையாக சம்பளமா கொடுத்த மாநிலம் என்ற பெருமையை புதுச்சேரி மாநிலம் பெற்றுள்ளது. திட்டமிட்டு மதுபான உரிமையாளர்களை தாக்கினார்..பல வழக்குகளை என்னையும் மீறி போட்டார்கள்" என்றார். 


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR