புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை முதல் கனமழை பெய்து வருகிறது. விடாமல் பெய்யும் பலத்த மழை இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது. புதுச்சேரி முழுவதும் பெய்த கனமழையால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளானார்கள். வீடுகளுக்குள் தண்ணீர் நுழைந்ததால் பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
நகராட்சி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை முதல் தண்ணீரை வெளியேற்றுவதில் ஈடுபட்டுள்ளனர். மேலு சமூக சேவை அமைப்புகளும் நிலைமையை கையாள்வதில் தீவிரமாக பணுபுரிந்து வருகின்றன. பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதற்கிடையில், புதுச்சேரியின் (Puducherry) துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் வி நாராயணசாமி ஆகியோர் தாழ்வான பல பகுதிகளுக்குச் சென்று வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க உத்தரவிட்டனர்.
ALSO READ: Weather Forecast: தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழை பெய்யலாம் வானிலை மையம் கணிப்பு
உப்பளம் பெரிய கால்வாய்க்குச் சென்ற தமிழிசை சௌந்தரராஜன், அதில் அடைப்புகள் இருப்பதைக் கண்டு, அதை உடனையாக சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர், அவர் தெங்கைத்திட்டு, வசந்தன் நகர், ரெயின்போ நகர் போன்ற பகுதிகளுக்குச் சென்று மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.
துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் மழைக்கான நிவாரணப் பணிகள் குறித்த ஒரு மறுஆய்வுக் கூட்டத்தையும் நடத்தினார். உடனடியாக நிவாரணப் பணிகளைத் தொடங்கவும், குடிமக்கள் கஷ்டங்களை எதிர்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவும் அவர் ராஜ் நிவாஸ் செயலகத்திற்கு அறிவுறுத்தினார்.
"புதுச்சேரியின் பல்வேறு நீர்நிலைகளை ஆய்வு செய்த பின்னர், மாண்புமிகு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ராஜ் நிவாஸில் ஒரு மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.” என்று ராஜ் நிவாஸ் செய்திக்குறிப்பு தெரிவித்தது.
Restoration & Cleaning works undergoing after the Inspection & Instruction of #LieutenantGovernor today morning at the affected areas . Appreciate the district administration, Revenue officials,PWD officials of #Puducherry for the prompt follow up action amidst rain & flooding. pic.twitter.com/B3zbPhQmK9
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) February 21, 2021
முதலமைச்சர் நாராயணசாமி, வெங்கடநகர், ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர் போன்ற இடங்களுக்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டார்.
இதற்கிடையில், இங்கு பெய்த பெருமழையைத் தொடர்ந்து 35 வயது பெண் ஒருவர் வெள்ளதில் அடித்து செல்லப்பட்டார். காவல் துறையின் கூற்றுப்படி, சண்முகபுரத்தில் மீன் விற்பனையாளரான ஹசினா பேகம் தனது இரு சக்கர வாகனத்தை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்காக தனது வீட்டை விட்டு வெளியே வந்தார். ஆனால், வாகனத்தை மாற்றும் முயற்சியில், வாகனத்துடன் அவர் கீழே விழுந்து விட்டார்.
இந்நிலையில் வெள்ளத்தின் வேகத்தில் நீரோடு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஹசீனா பேகத்தைத் தேடுவதற்காக மேட்டுப்பாளையம் பொலிஸ் மற்றும் தீயணைப்பு சேவை மற்றும் மீட்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
புதுச்சேரியில் பெய்து வரும் கனமழையைக் கருத்தில் கொண்டு, புதுச்சேரி நிர்வாகம் திங்களன்று 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்தது. வானிலை ஆய்வு துறை அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிக மழை பெய்யும் என்று கணித்துள்ளது. இங்குள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: Puducherry: பெரும்பான்மையை நிரூபிக்கும்படி நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை உத்தரவு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR