இணையவேகத்தை கூட்டும் புதிய தொழில்நுட்பங்களை சந்தைப்படுத்தும் முயற்சியில் மிகப்பெரிய டெக் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக வைஃபை 7 பரிசோதனையை குவால்காம் நிறுவனம் தொடங்கியுள்ளது. வைஃபை 6 தொழில்நுட்பமே இன்னும் பல பகுதிகளுக்கு சென்றடையாத நிலையில், அடுத்த வெர்சன் வைஃபை பரிசோதனையை தொடங்கியுள்ளதாக குவால்காம் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வாட்ஸ்அப்பில் Font டிசைன்களை மாற்றுவது எப்படி?


 வைஃபை 7 தொழில்நுட்பம் மூலம் குறைந்த லேட்டன்ஸியில் உட்சபட்ச வேகத்தை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்துள்ள குவால்காம் நிறுவனம், விரைவில் இதன் அடுத்த அப்டேட்டுகளை தெரிவிப்பதாக கூறியுள்ளது. இதேபோல் மீடியா டெக் நிறுவனமும் வைஃபை 7 தொழில்நுட்ப சோதனையை மேற்கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது. தொடக்கம் முதலே வைஃபை 7 தொழில்நுட்ப சோதனையில் ஈடுபட்டு வரும் மீடியா டெக் நிறுவனம் 2023-ம் ஆண்டு முதல் அந்த தொழில்நுட்பத்தை சந்தைப்படுத்தபோவதாகவும் அறிவித்துள்ளது.


மேலும் படிக்க | இன்ஸ்டாகிராமில் படங்கள் மற்றும் வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி?


வைஃபை 7 தொழில்நுட்பம் சந்தைக்கு வரும்பட்சத்தில் உட்சபட்ச வேகத்தையும், குறைந்த லேடன்சியையும், நிலையான இணைப்பையும் உறுதி செய்யும் என டெக் நிறுவனங்கள் கூறுகின்றன. இதற்கு முன் உள்ள வைஃபை போன்று இல்லாமல் வைஃபை 7, 2.4GHz, 5GHz மற்றும் 6GHz என மூன்று ஃப்ரீக்வன்சி பேண்டுகளை வழங்குகிறது. இதனை நாம் தண்டர்போல்ட் 3 போர்ட் வழங்கும் வேகத்துடன் ஒப்பிட முடியும்.


வைஃபை 7 தொழில்நுட்பம் 3 ஃபிரிக்வன்ஸி பேண்டுகளையும் சிறப்பாக பயன்படுத்தும். ஒரே நேரத்தில் 2 ஃபிரிக்வன்ஸிகளிலும் இயங்ககூடியது. இதன் பேண்ட்வித் 320 MHz வரை விரிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிவேக வைஃபை 7 மூலம் மெட்டாவெர்ஸ், சோசியல் கேமிங், கிளவுட் கம்ப்யூட்டிங், தொழிற்சாலைக்கான ஐ.ஓ.டி, வீடியோ ஸ்ட்ரீமிங் உள்ளிட்ட பல பலன்களை பெறலாம் என டெக் உலகினர் தெரிவித்துள்ளனர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR