ப்ரீபெய்டு திட்டங்களின் காலத்தை 30 நாட்களாக உயர்த்த வேண்டும் - டிராய் அதிரடி உத்தரவு!
இதுவரை 28 நாட்கள் இருந்த ப்ரீபெய்டு திட்டங்களின் காலத்தை 30 நாட்களாக உயர்த்த அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் TRAI உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 27, 2022 அன்று TRAI , Telecom Tariff (66th amaendment ) Order, 2022ன் படி அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் சில புதிய உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை 28 நாட்கள் இருந்த ப்ரீபெய்டு திட்டங்களின் காலத்தை 30 நாட்களாக உயர்த்தக்கோரியுள்ளது. செல்போன் பிரீபெய்டு (Prepaid) வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத திட்டமாக வழங்கப்படும் வவுச்சர்கள் 28 நாட்களாகவே இருக்கின்றன. இதனால் ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 30 நாள் திட்டம் ஒன்றை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என TRAI உத்தரவிட்டு உள்ளது.
ALSO READ | Vi பயனர்களுக்கு அதிர்ச்சி, மீண்டும் உயர்கிறது ரீசார்ஜ் திட்டங்களின் விலை
அதன்படி திட்ட வவுச்சர், சிறப்பு டாரிப் வவுச்சர் மற்றும் காம்போ வவுச்சர் ஆகியவற்றில் தலா ஒரு திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என டிராய் உத்தரவிட்டு உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு மேற்கொள்ளும் பிரீபெய்டு ரீசார்ஜ்களின் (Recharge) எண்ணிக்கை 12 ஆக குறையும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும் எந்த ரீசார்ஜ் வசதியையும் Telecom நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இவ்வாறு பல வாடிக்கையாளர்களிடம் இருந்தும் அடிக்கடி புகார்கள் வந்த நிலையில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மக்களிடையே வரவேற்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Telecom Tariff (66th amaendment ) Order, 2022 வெளியிடப்பட்ட பிறகு, Telecom நிறுவனங்களின் அனைத்து வாடிக்கையாளர்களும் அவர்களது விருப்பப்படி பலவிதமான திட்டங்களை பெறமுடியும். அதோடு வாடிக்கையாளர்கள் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய திட்டங்களையும் தேர்வு செய்ய முடியும்.
ALSO READ | Jio அசத்தல்; ரூ. 150-க்குள் கிடைக்கும் அட்டகாசமான ரீசார்ஜ் திட்டம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR