5ஜி அனுமதி தற்போது பல தனியார் கார்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், பி.எஸ்.என். எல் நிறுவனம் மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசு (Central Government) திட்டமிட்டு பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை நலிவடையச் செய்வதாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் (Bharat Sanchar Nigam Limited) அலுவலகம் முன் "செல்ஃபி வித் பி.எஸ்.என் எல்", என்ற நூதன போராட்டத்தை நடத்தினர்.
ALSO READ | விரைவில் வருகிறது மலிவு விலை 5G போன்: அசத்த காத்திருக்கும் Apple நிறுவனம்
இந்த சங்கத்தின், மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர் சங்கத்தினரும் திரளாக பங்கேற்றனர். இது குறித்து பேசிய அவர்கள், கொரோனா தொற்றின் மூன்றாவது அலை துவங்கியுள்ள காரணத்தால் பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் மூலமான மீண்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிவோர் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய தனியார் நிறுவனங்கள் ஊக்குவித்து வரும் நிலையில், ஆன்லைன் பயன்பாடு எப்போதை விடவும் வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்த நேரத்தில், தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் அலைவரிசையை "நெட்" பயன்படுத்த கட்டண உயர்வை பன்மடங்கு உயர்த்தியுள்ளனர் இச்சூழலில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் குறைவான கட்டணங்களுடன் சேவையாற்றி வருகின்றது. எனவே, மத்திய அரசு பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4ஜி 5ஜி அலைகாற்றின் உரிமையையும், அதை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவிகளையும், நிதியையும் உடனடியாக வழங்க வேண்டும். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டண உயர்வை குறைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்", என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
ALSO READ | Google: பிரைவசிக்காக கூகுள் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் அப்டேட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR