AnyDesk என்ற மொபைல் ஆப்பினை தயவு செய்து யாரும் டவுன்லோட் செய்யாதீர்கள் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்மார்ட்போன் வந்த பிறகு பெரும்பாலோனோர் வங்கிக்கணக்கில் இருந்து பணம் அனுப்ப, பெற மொபைல் வாலெட் எனப்படும் சேவைவை அதிகளவில் பயன்படுத்தத்தொடங்கியுள்ளனர். எனினும் இதிலிருக்கும் ஆபத்துகள் மலையளவு என்பதை யாரும் மறுக்கமுடியாது. 


சமீபத்தில் அறிமுகமான ஒரு ஆப் ஒன்று பலரது வங்கி கணக்குகளை வழித்து எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. அந்த வகையில் மொபைல் மற்றும் லேப்டாப்களில் இயங்க கூடிய 'AnyDesk' என்ற சாப்ட்வேரை யாரும் டவுன்லோட் செய்ய வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. சமீபத்தில், ரிசர்வ் வங்கி விடுத்த எச்சரிக்கையில், இந்த ஆப்பில் UPI மூலம் சில மோசடி பரிவர்த்தனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


AnyDesk ஆப் டவுன்லோட் செய்யப்பட்டவுடன் 9 இலக்கு எண் கிடைக்கும். அதனை, அந்த சைபர் கிரிமினல்கள், வங்கியில் இருந்து பேசுவதாக சொல்லி பெற்று விடுவார்கள். அந்த நம்பரை பெற்றுவிட்டால், உங்கள் மொபைலின் செயல்பாடு ஹேக்கர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும் என்றும் எச்சரிக்கை செய்தியில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.