ரியல்மி 10 ப்ரோ ப்ளஸ் இந்தியாவில் விரைவில் ரிலீஸ்
ரியல்மி 10 ப்ரோ ப்ளஸ் ஃபோன் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது
ரியல்மி 10 சீரிஸ் மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பல்வேறு சான்றளிக்கும் வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில், இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் தற்போது பிஐஎஸ் வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். பிஐஎஸ் வலைதள விவரங்களின் படி புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் RMX3686 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.
இதே மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் முன்னதாக என்பிடிசி, இஇசி மற்றும் டிகேடிஎன் என பல்வேறு வலைதளங்களில் வெளியாகி இருந்தது. தொடர்ச்சியாக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.
மேலும் படிக்க | Redmi A1+: விலை வெறும் ரூ.7000, அம்சங்கள் அட்டகாசம், புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்
புதிய ஸ்மார்ட்போன் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் என அழைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் OIS, அதிக ரெசல்யூஷன் என தலைசிறந்த கேமரா அம்சங்கள் வழங்கப்படும் என்றும் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முந்தைய 9 ப்ரோ பிளஸ் மாடலிலும் இதே போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ரியல்மி 9 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலில் 6.4 இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர், மாலி G68 MC4 GPU, 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று கேமரா சென்சார்கள், 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே ரியல்மி 10 சீரிசை சேர்ந்த மற்றொரு ஸ்மார்ட்போன் RMX3630 எனும் மாடல் நம்பருடன் இணையத்தில் லீக் ஆகி இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் பெடரல் கம்யூனிகேஷன் கமிஷன் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருந்தது. இதே ஸ்மார்ட்போன் கீக்பென்ச் டேட்டாபேஸ், பிஐஎஸ், இந்தோனேசியா டெலிகாம், என்பிடிசி போன்ற வலைதளங்களிலும் வெளியாகி இருந்தது.
மேலும் படிக்க | Amazon Offer: ரூ.79 ஆயிரம் ஸ்மார்ட்போன் ஆஃபரில் 14,000-க்கு விற்பனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ