ரியல்மி நிறுவனம் புதிய சிறப்பு விற்பனையை ரியல்மி டேஸ் சேல் (Realme Days Sale) என்ற பெயரில் தொடங்கியுள்ளது. இந்த சலுகை ஏப்ரல் 21 தொடங்கி ஏப்ரல் 24 வரை மொத்தம் நான்கு நாட்கள் நீடிக்கும். இந்த சிறப்பு விற்பனையின் கீழ் நுகர்வோர்கள் பல ரியல்மி ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் ஆக்சஸெரீஸ்களில் தள்ளுபடியை பெறலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சிறப்பு விற்பனை ரியல்மி (Realme) இணையதளம் (https://www.realme.com/in/) வழியாக அணுக கிடைக்கும். ஸ்மார்ட்போன்கள் (Smartphone) மற்றும் பிற தயாரிப்புகளின் மீதான தனிப்பட்ட தள்ளுபடிககளை தவிர, ரியல்மி நிறுவனம் Freecharge வழியிலான பரிவர்த்தனைக்கு ரூ.75 கேஷ்பேக் மற்றும் 10 சதவீதம் கேஷ்பேக் (ரூ.200 வரை) ஆகியவற்றையும் வழங்குகிறது.


ரியல்மி சி15 குவால்காம் எடிஷன், ரியல்மி 7 ப்ரோ, ரியல்மி நர்சோ 20 ப்ரோ, ரியல்மி 6 ப்ரோ, ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் உட்பட பல ரியல்மி ஸ்மார்ட்போன்கள் மீது ஏப்ரல் 24 வரை செம ஆபர்கள் இந்த சலுகையில் பெறலாம். அந்தவகையில் எந்தெந்த மாடல்களின் எத்தனை ஆபர் கிடைக்கிறது என்பதை பார்போம். 


ALSO READ | உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறந்த ஸ்மார்ட்போன்கள்; ஒரு அலசல்


ரியல்மி 7: இந்த தொலைபேசி ரூ.13,499 விலையில் விற்கப்படுகிறது. இந்த போனில் இது ஹீலியோ ஜி 95 சிப்செட் மற்றும் 90 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே போன்ற குறிப்பிடத்தக்க அம்சங்களை கொண்டுள்ளது.


ரியல்மி 7 ப்ரோ: ரியல்மி டேஸ் சேல் இல் இந்த போன் ரூ.17,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொலைபேசியில் இது 64 மெகாபிக்சல் சோனி கேமரா, 65W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் AMOLED டிஸ்ப்ளே ஆகியவற்றை கொண்டுள்ளது.


ரியல்மி நர்சோ 20 ப்ரோ: இந்த தொலைபேசி ரூ.12,999 விலையில் கிடைக்கும். நார்சோ 20 ப்ரோ ஆனது 65W பாஸ்ட் சார்ஜிங், 48 மெகாபிக்சல் பிரதான பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது.


ரியல்மி 6 ப்ரோ: ரியல்மி 6 ப்ரோ ரூ.17,999 க்கு பெறலாம். 


ரியல்மி எக்ஸ் 3 சீரிஸ்: ரியல்மி எக்ஸ் 3 ஆனது இப்போது ரூ.21,999 க்கும், ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் ரூ.22,999 க்கும் கிடைக்கிறது. 


ரியல்மி எக்ஸ் 7: இந்த தொலைபேசியில் ரூ.1,000 ப்ரீபெய்ட் கேஷ்பேக் சலுகையைப் பெறலாம், இதன் மூலம் குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் விலையை ரூ.18,999 ஆகக் குறையும். 


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR